இதுதான் நீங்க சொன்ன வித்தியாசமான அரசியலா?.. திமுக அரசை சாடிய அண்ணாமலை!
தூத்துக்குடி: பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். தி.மு.க தனது வித்தியாசமான அரசியலை சட்டப்பேரவையில்தான் காண்பிக்க வேண்டும் என்று தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் வந்திறங்கினார்.
தொடர்ந்து அவர் சாலை வழியாக தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் பூலித்தேவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்காக வந்துள்ளேன். தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன். கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

கூட்டணி தொடரும்
எனவே தமிழக அரசு மக்களுடைய பழக்கங்களையும், உணர்வுகளை மதிக்கக்கூடிய வகையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனை தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் நலனுக்கான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

பிரதமர் மோடி
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் புனரமைக்கப்பட்டதன் மூலம் தியாகிகள் வரலாறு சிதைக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மட்டுமே குற்றம்சாட்டியுள்ளார். அவர் வேண்டுமென்றே குற்றம்சாட்டி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருக்கக்கூடிய அம்ரீந்தர் சிங், ஜாலியன் வாலாபாக் நினைவிடம் புனரைமைக்கபட்டதை "அழகு" என்று குறிப்பிட்டு வரவேற்றுள்ளார். எனவே காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே வேறுபட்ட கருத்துக்கள். முரண் கருத்துக்கள் உள்ளது. பிரதமர் மோடி, தலைமையிலான அரசு, தியாகிகள் நினைவிடத்தை செம்மைப்படுத்தியுள்ளது என்பதை மறுக்கமுடியாது.

கைவிட வேண்டும்
1958-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் முந்தைய முதல்வர் பெயரில் ஒருவர் செய்ததை மற்றொருவர் எடுப்பதும், மாற்றுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நடைமுறையை இந்த அரசாவது கைவிட வேண்டும். அதன்படி பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதையே பா.ஜ.க கட்சி சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரனும் நேற்று சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.

வித்தியாசமான அரசியல்
தமிழகத்தில் வித்தியாசமான அரசியலை காட்டப் போகிறோம் என தி.மு.க.வினர் சொன்னார்கள். அவர்கள், வித்தியாசமான அரசியலை சட்டப்பேரவையில்தான் காண்பிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களை அதன் பெயரிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதையே பா.ஜ.க வலியுறுத்துகிறது. தமிழக அரசு இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கும் என நம்புகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications