தூத்துக்குடி தொகுதிக்கு என்ன செய்வேன்.. தமிழிசை வெளியிட்ட செம வீடியோ
தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதிக்கு என்ன செய்வேன் என்ற பெயரில் குறும்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார், பாஜக தலைவரும், அத்தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன்.
இதுபற்றி வீடியோ ஒன்றில் தமிழிசை கூறியுள்ளதை பாருங்கள்: இங்கே இளைஞர்கள் இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னைக்கோ, கோவைக்கோ செல்ல வேண்டியுள்ளது. ஐடி பார்க் தூத்துக்குடியிலேயே வந்தால் எப்படி நன்றாக இருக்கும். இளைஞர்கள் தங்கள் தாய், தந்தை குடும்பத்தோடு இணைந்து பணியாற்ற முடியுமல்லவா?

கலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்!
இங்குள்ள மருத்துவமனை உலகத்தரம் உள்ள மருத்துவமனையாக மாற்றப்பட வேண்டும். இதேபோல எண்ணற்ற திட்டங்கள் உள்ளன. இங்கேயே உங்களோடு இருப்பேன். எப்போதும் என்னை அணுகலாம். சேவை செய்ய காத்திருக்கிறேன். உங்கள் சகோதரியை உங்கள் லோக்சபா உறுப்பினராக ஆக்கிக்கொள்ளுங்கள்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கான எனது திட்டங்கள்... @BJP4TamilNadu pic.twitter.com/GamefBeYXi
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 15, 2019
தென் பகுதியை சேர்ந்த நான், இப்பகுதியை வளர்ச்சியடைந்த பகுதியாக மாற்ற வேண்டும் என்ற ஆசையில் தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த பகுதிக்காக மிகப்பெரிய கனவுத் திட்டத்தை வைத்துள்ளேன். வாழை நாரில் சேலை, கோட் செய்யலாம். இதை ஒரு தொழிலாக்கலாம். வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி பெருகும்.
தூத்துக்குடியின் முக்கிய வளம் மீன் வளம். மீன்களை ஏற்றுமதி செய்வதோடு, பதப்படுத்தி பல நன்மைகளுக்கு பயன்படுத்தலாம். மருந்துக்கு கூட மீன்களை பயன்படுத்தலாம். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கைவிடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications