Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் "கால்" வைத்த நடிகை ரோஜா.. சட்டென "அந்த" வார்த்தையை சொன்னதுமே.. அசந்து பார்த்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: நடிகை ரோஜாவின் உணர்வுப்பூர்வமான பேச்சைக்கேட்டு, வேலூர் மக்கள் நெகிழ்ந்து போயுள்ளார்கள்.. அமைச்சர் ரோஜாவின் விழிப்புணர்வு பேச்சும், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

நடிகை ரோஜா, தமிழ், தெலுங்கு சினிமா உலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றவர்.. 90களில் மிகவும் பிரபலமாக திரையுலகில் வலம் வந்தவர். சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், திடீரென அரசியலிலும் என்ட்ரி தந்தார்.. ஆந்திர அரசியலில் "ஃபயர் பிராண்ட்" என்ற பெயரை பெற்றவர் நடிகை ரோஜா..

Actress Minister Rojas Excellent speech and says about Good of Organ Donation in Vellore Meeting

அமைச்சர் ரோஜா: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல அதிரடிகளை செய்தவர்.. ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா.. இவரது அரசியல் செயல்பாடுகள் அனைத்துமே தொகுதி மக்களால் பெரிதும் பேசப்பட்டதால், அமைச்சர் பதவியும் தானாகவே இவரை தேடி வந்தது... சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார்...

எனவே, சுற்றுலா, கலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் ஆந்திர மாநில அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.. இதுபோன்ற விழாக்களில் பங்கேற்கும்போதெல்லாம், மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து கலகலப்பாகி விடுவார் ரோஜா..

கலகலப்பு ரோஜா: மாணவிகள் மேடையில் நடனமாடி கொண்டிருந்தால், அவர்களுடன் சேர்ந்து ரோஜாவும் டான்ஸ் ஆடுவார்.. கபடி விளையாடினால், அவர்களுடன் சேர்ந்து ரோஜாவும் கபடி விளையாடுவார்.. அரசியலில் இறங்கினாலும், அமைச்சராகவே பதவிவகித்தாலும், மாணவிகளுடன் சகஜமாக ஆடிய நடனம், காண்போரை வியக்க வைத்து வருகிறது..
சுற்றுலாத்துறை அபாரம்: பொதுவாக, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறையானது, அந்த அளவுக்கு பிரபலமானது கிடையாது.. இதன்காரணமாகவே, சுற்றுலா துறை அமைச்சர்கள் பற்றின செயல்பாடும், செய்திகளும் மக்களை பெரும்பாலும் சென்றடைவதும் இல்லை.. ஆனால், ரோஜா இந்த பொறுப்புக்கு வந்தபிறகு, சுற்றுலா துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது..

இயல்பாகவே கலாரசனையும், கலகலப்பு குணமும் கொண்ட ரோஜாவுக்கு, இந்த துறை மிக பொருத்தமாகவே அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.. எந்தவித பந்தாவும், கெடுபிடியும் இல்லாமல், சகஜமாக பழகும் அவரது இயல்பான குணமும், இதற்கு பேருதவியாக திகழ்ந்து வருகிறது.. அந்தவகையில், சுற்றுலா மற்றும் கலைகளை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும், அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே வருகிறார் நடிகை ரோஜா செல்வமணி..!

வேலூர் விழிப்புணர்வு: இதோ இப்போதுகூட, உடலுறுப்புகள் தானம் குறித்து வேலூரில் ரோஜா பேசியிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் சார்பில் சர்வதேச உடலுறுப்புகள் தானம் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரோஜா பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பேசியதாவது:

"உடலுறுப்பு தானம் குறித்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனை மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை வரவேற்கிறேன். எந்த கடவுளோ, மதமோ உடலுறுப்பு தானம் செய்யக்கூடாது என்று சொல்லலையே.. உடலுறுப்பு தானம் செய்வதன் மூலம் மரணத்துக்கு பிறகும் உயிர் வாழ முடியும்.

மண்ணில் புதைக்காதீங்க: தானத்தில் சிறந்தது என்று முன்பு அன்னதானத்தை சொன்னார்கள்.. ஆனால், இன்று தானத்தில் சிறந்தது உடலுறுப்பு தானமாகும். அன்னதானம் பசியைப் போக்கும்.. கல்வி தானம், அறியாமையை போக்கும்.. பூமிதானம் வேலைவாய்ப்பை கொடுக்கும்.. ஆனால், இந்த உடலுறுப்பு தானம் மட்டும்தான், ஒரு மனிதனுக்கு உயிரையே கொடுக்கும். மரணம் அடைந்த பிறகு மண்ணில் புதைக்காதீங்க.. மனிதர்கள் மேல் விதையுங்கள்..

உடலுறுப்பு தானம் மூலம் மற்றவர்களுக்கு உயிர்கொடுப்பதால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் உறுப்பு தானம் செய்தவர்களை கடவுளாகவே வணங்குவார்கள்..

நெகிழ்ச்சி: அந்த குடும்பங்கள் உடலுறுப்பு தானம் செய்தவரை பிரம்மாவுக்கு நிகராக போற்றுவார்கள். அதனால், ஒருவர் மரணித்தபிறகு அவரது உடலை மண்ணில் புதைக்காமல், உடலுறுப்பு தானம் மூலம் மனிதர்களின் மேல் விதைக்க வேண்டும்.. மரணத்துக்கு பிறகு நாம் வாழ்வோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+