வெயிட்டிங் லிஸ்டில் அதிமுக மாஜி அமைச்சர்! நெகட்டிவ் ரிப்போர்ட்! கிரீன் சிக்னல் கொடுக்காத ஸ்டாலின்!
வேலூர்: திமுகவில் இணைய விரும்பும் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீலுக்கு அறிவாலயத்தில் இருந்து இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்காததற்கு அவர் மீதான நெகட்டிவ் ரிப்போர்டே காரணம் எனக் கூறப்படுகிறது.
வேலைவாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக மாஜி அமைச்சர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அவரை கட்சியில் சேர்க்க திமுக தலைமை ஆர்வம் காட்டவில்லையாம்.
மேலும், நிலோபர் கபீலை திமுகவில் இணைப்பதன் மூலம் சொல்லிக்கொள்ளும் படி கட்சிக்கு எந்த பயனும் இல்லை என்ற ரிப்போர்டும் இதற்கு காரணமாம்.

வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த நிலோபர் கபீல் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். அதற்கு முன், 2006-2011 வரையிலான காலத்தில் வாணியம்பாடி நகர்மன்ற தலைவராக இருந்தவர். 2011-ல் அதிமுகவில் இணைந்த இவருக்கு 2016-ம் ஆண்டும் அமைச்சராகும் அதிர்ஷ்டம் தேடி வந்தது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் உள்ளூர் அரசியலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இப்போது திமுகவுக்கு தூதுவிட்டு அதில் இணைய காத்திருப்பதாக கூறப்படுகிறது.

நெகட்டிவ் ரிப்போர்ட்
இதனிடையே அதிமுக மாஜி அமைச்சர் நிலோபர் கபில் மீது எழுந்துள்ள பணமோசடி புகார் அறிவாலயத்தை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறதாம். இவரது உதவியாளர் முன்வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு குறித்தும் நிலோபர் கபிலின் செயல்பாடுகள் பற்றியும் திமுக தலைமைக்கு நெகட்டிவ் ரிப்போர்ட் கிடைத்ததை அடுத்து, அவரை கட்சியில் இணைக்கும் நிகழ்வு பற்றி ஸ்டாலின் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெயிட்டிங் லிஸ்ட்
நிலோபர் கபிலை திமுக வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருக்கும் தகவலை அறிந்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தரப்பு கொண்டாடி வருகிறதாம். மேலும், தங்களுக்கு இருக்கும் மாவட்ட திமுக தொடர்புகளிடம் நிலோபர் கபீல் பற்றிய தகவல்களை கூறி திமுகவில் சேர்க்கவேண்டாம் என தூபம் போடப்படுகிறதாம். இதனிடையே அறிவாலய வாசல் திறப்புகாக காத்திருக்கும் மாஜி அமைச்சர் நிலோபர் கபீல், தன்னுடன் குறைந்தது 5,000 பேரையாவது திமுகவுக்கு அழைத்துச்செல்ல முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரிப்பு
திமுக ஆட்சி அமைந்த பிறகு மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்வை மாதம் இரண்டு முறையாவது பார்க்க முடிகிறது. உள்ளூரில் செல்வாக்கு உள்ள நபர்களை திமுகவில் இணைக்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்?












Click it and Unblock the Notifications