மூச்சுவாங்க ஓடி வந்து மனுதாக்கல் செய்த பெண்.. கொந்தளித்த மலைகிராம மக்கள்.. ஆம்பூரில் பரபரப்பு
கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்ய வந்த பெண்ணால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே, ஊராட்சி தலைவர் தொகுதியை பட்டியலின மக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலைகிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. பட்டியலின பெண் கடைசி நேரத்தில் ஓடிவந்து வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவரை தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், அது தொடர்பான பிரச்சனைகளும், விவகாரங்களும் வெடித்து கிளம்பி வருகின்றன..
இதையொட்டி அதிமுக - திமுக இடையே மோதல்களும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியதிற்கு உட்பட்ட கொத்தகோட்டை ஊராட்சி, செக்குமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்...

மனுதாக்கல்
அதிமுகவை சேர்ந்த இவர் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய 7வது வார்டில் மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்தார். ஆனால் அவர் மனுதாக்கல் செய்யவரவில்லை. அவருக்கு பதில் மனுவை முன்மொழியும் நபர், ஜெய்சங்கரின் மனுவை தாக்கல் செய்ய வந்தார்... இதனால், தேர்தல் அதிகாரி மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்துதருமாறு சொன்னார்.. உடனே அந்த மனுவை சரிசெய்து நேற்று மாலை 5.05 மணிக்கு தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.

திமுக
ஆனால், இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.. அவர் 4.40 மணிக்கே அலுவலக வளாகத்திற்குள் வந்ததாகவும், அதனால் மனுவை வாங்க வேண்டும் என்று அதிகாரியிடம் அதிமுகவினர் வலியுறுத்தினர்... இதனால் திமுக - அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது...

மோதல்
மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிச்சாண்டியை மாற்ற வலியுறுத்தி அலுவலக வளாகத்தில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி தலைமையில் திமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். உடனே அதிமுகவினரும், தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இப்படித்தான் இன்னொரு சம்பவம் இதே திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. பட்டியலின பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.. இவரைதான் கிராம மக்கள் மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்துள்ளனர்..

பழங்குடி கிராமம்
ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி கிராமம் உள்ளது.. இது ஒரு மலை கிராமம்.. பழங்குடியினர் இங்கு அதிக அளவு வசித்து வருகின்றனர்.. அந்த ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளும் பழங்குடியினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. இதுநாள் வரை நடைபெற்ற தேர்தல்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கும் மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப்பிரினருக்குதான், இடஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது..

இந்துமதி
ஆனால், இந்த முறை நாயக்கனேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. நாயக்கனேரியில் உள்ள 3440 வாக்காளர்களில் 5 பேர் மட்டுமே ஆதிதிராவிடர்கள் உள்ளனர்.. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை, பழங்குடியினருக்கு ஒதுக்கக்கோரி, மலைக்கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. இதனால், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான 9 இடங்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் அந்த கிராமத்தில் ஒருவர்கூட வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை..

வாக்குவாதம்
இந்த நிலையில், 9-வது வார்டு பகுதியை சேர்ந்த இந்துமதி என்ற பெண், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.. நாயக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட காமதனட்டி பகுதியில் தான் வசித்து வருவதாக கூறி அவசர அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.. அவரை பார்த்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர்.. இருந்தாலும், கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி, மூச்சிரைக்க ஓடிச்சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்..

பாதுகாப்பு
அவரது வேட்பு மனுவை ஏற்க கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.. மனு தாக்கல் செய்ய ஓடிவந்த அந்த பெண்ணையும் தடுத்து நிறுத்திவிட்டனர்.. பிறகு, மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டு முழக்கமிட்டதால், பெரும் பரபரரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, எதிர்ப்பையும் மீறி ஓடிவந்து மனுதாக்கல் செய்த இந்துமதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி உறுதி தந்துள்ளார்.

கடைசி நிமிஷம்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடையும் என்பதாலேயே இந்துமதி ஓடி வந்தார்.. கூடவே அவரது கணவன் பாண்டியனும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்தார். ஒருகட்டத்தில் ஓட முடியாத இந்துமதியை அவரது கணவர் கையை பிடித்துக் கொண்டு வேகமாக இழுத்து சென்றார்... வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு ஓடி சென்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு இருக்கையில் உட்கார்ந்தனர். ஓடிவந்ததால் மூச்சு வாங்கியபடி மனுதாக்கல் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்... அவர்களை அங்கிருந்த அதிகாரி ஆசுவாசப்படுத்தினார்.

வீடியோ
இவர்கள் ஓடிவந்து மனு தாக்கல் செய்வதை அங்கிருந்தோர் வீடியோவாகவும் எடுத்தனர்.. இந்த காட்சிகள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது... மனுத்தாக்கல் முடிந்தபிறகு தம்பதி இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.. பிறகு செய்தியாளர்களிடம் இந்துமதி பேசியதாவது: "நான் நாயக்கனேரி ஊராட்சி பகுதியில் உள்ள காமனூர்தட்டு பகுதியிலுள்ள பாண்டியன் என்ற மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டேன்.

பேட்டி
அவருடன் வாழ்ந்து வந்த நிலையில் தேர்தல் ஆணையம் நாயக்கனேரி ஊராட்சி பகுதிக்கு ஆதிதிராவிடர் பெண் போட்டியிட அறிவித்ததால் நான் போட்டியிட முயற்சி செய்தேன்... அதை தடுப்பதற்காக கிராம மக்கள் தொடர்ந்து எங்களுக்கு மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வந்தனர்.. எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் நான் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பம் செய்திருந்தேன்...

பரிசீலனை
அதையும் எனக்கு கொடுக்க கூடாது என்று நேற்று வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து புகார் மனு கொடுத்தனர். இப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் நான் அந்த பதவிக்கு போட்டியிட மனு அளித்துள்ளேன்... ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு பணியாற்றுவேன். நாளை மனு பரிசீலனை செய்யப்பட்டு அதிகாரிகள் முடிவை அறிவிப்பார்கள்" என்றார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications