புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலுக்கு இனி நோ! சலூன் கடைகளுக்கு கடிவாளம்! அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்!
வேலூர் : வேலூரில் பள்ளி மாணவர்களுக்கு புள்ளிங்கோ ஸ்டைஸ் போல தலைமுடியை சீராக வெட்டாத சலூன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாது பள்ளி மாணவர்கள் பலரும் பள்ளிக்குச் செல்லும் போது காதுகளில் கம்மலை மாட்டிக்கொண்டு புள்ளிங்கோ ஸ்டைலில் முடியை வெட்டிக்கொண்டு, முடியில் கலரிங் செய்து வலம் வருகின்றனர்.
நில நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் காதில் போட்டிருந்த தோடுகளைக் கழட்டச் சொல்லியும், அந்த பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை சொல்லியும் அனுப்பிவைத்து வருகின்றனர். ஆனால் அதனை மாணவர்கள் கண்டுகொள்ளாமல் சுற்றித் திரிகின்றனர்.

புள்ளிங்கோ ஸ்டைல்
பலமுறை புள்ளிங்கோ ஸ்டைலில் சலூன் கடைக்காரர்கள் முடி வெட்டி, கலர் அடிக்கக்கூடாது. மீறி நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சலூன் கடைக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் அதனையும் ஒரு சில கடைக்காரர்கள் கண்டு கொள்ளாமல் மாணவர்களின் விருப்பத்திற்கேற்றார் போல் முடி வெட்டி வருகின்றனர்.

ஆட்சியர் எச்சரிக்கை
காரணம் அவர்கள் இஷ்டம் போல் வெட்டாவிட்டால் அடுத்து கடைக்கு வர மாட்டார்கள் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். ஆனால் மாணவர்களின் நலன் மற்றும் பண்பை பாதுகாப்பதில் அனைவருக்குமே பொறுப்புணர்வு இருக்க வேண்டுமென்பதிலும் மாற்றும் கருத்து இருக்கு முடியாது. இந்நிலையில் வேலூரில் பள்ளி மாணவர்களுக்கு புள்ளிங்கோ ஸ்டைஸ் போல தலைமுடியை சீராக வெட்டாத சலூன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சலூர் கடைகள் மீது நடவடிக்கை
வேலூரில் பள்ளிகள் ஆய்வு செய்த ஆட்சியர் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,: சீருடை மற்றும் சிகை அலங்காரம் ஆகியவைகள் மாணவர்கள் ஒரே மாதிரியாக வரவேண்டும். அதற்காக சலூன் கடைகாரர்கள் மற்றும் தையல்காரர்களை அழைத்து அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்கள் கட்டாயம் இதனை கடைபிடிக்க வேண்டும்.

மக்கள் பாராட்டு
மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடை காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், கடைகளுக்கு சீல் வைக்கப்படும். ஏற்கனவே வேறு விதமாக முடிவெட்டிக் கொண்டவர்களுக்கு இலவசமாக முடியை திருத்தி வெட்டவேண்டும். அரசு வழங்கும் சீருடைகளை மாற்றி முழங்கால் தெரியும் வரை தைத்துக் கொடுக்கும் டைலர் கடை கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அவரது இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பாராட்டுதலை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சலூன் கடைகள் மீது ஒட்டுமொத்த பழியையும் போடாமல் பெற்றோர் பிள்ளைகள் நடை உடை பாவனைகளை கவனிக்க வேண்டியதும் அவசியம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications