தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்? வேலூரில் அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்.. என்னென்ன ரூல்ஸ்?
வேலூர்: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது. இதனால் சென்னை விமான நிலையம், பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் கொரானா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கபட்டுள்ளது. அதன்படி, வழக்கறிஞர்கள், அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும்.

இந்த நிலையில் வேலூரில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாகங்களில் ஏசி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க திருமண மண்டபங்களில் 100 பேர் மட்டுமே இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications