காலத்திற்கும் பெயர் சொல்லும் கல்வெட்டு; எதிர்கட்சித் தலைவர் நயினாராம்! அதிமுகவுக்கு ஷாக் தந்த பாஜக!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிட்டு திருப்பத்தூரில் கல்வெட்டு அமைத்திருக்கும் விவகாரம் அதிமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் பாஜகவினர் வைத்துள்ள இந்த கல்வெட்டு இரண்டு கட்சிகளிடையே புகைச்சலை ஏற்படுத்தி விடும் போல் தெரிகிறது.

இதனிடையே சட்டமன்ற பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 பாஜக அலுவலகம்

பாஜக அலுவலகம்

திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக இழுத்துக்கொண்டே வந்து ஒரு வழியாக 2 ஆண்டுகளுக்கு பின் அந்த அலுவலகம் இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டு தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்

எதிர்க்கட்சி தலைவர்

கல்வெட்டில் நயினார் நாகேந்திரன் பெயருக்கு கீழ் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என பொறிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளதால் சட்டமன்ற பாஜக குழு தலைவராக தான் அவரை கருத முடியுமே தவிர எதிர்க்கட்சி தலைவராக கருத முடியாது. இதனிடையே ஆர்வமிகுதியில் திருப்பத்தூர் பாஜகவினர் நயினாரை எதிர்க்கட்சி தலைவர் எனக் குறிப்பிட்டு கல்வெட்டு வடித்து அதை பொருத்தியுள்ளனர். தமிழ் மொழியை பொறுத்தவரை ஒரு சிறிய வார்த்தை கூட முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதன் மூலம் கருப்பொருளின் அர்த்தமே மாறிவிடக்கூடும்.

 கேலி கிண்டல்

கேலி கிண்டல்

இதனிடையே இந்த கல்வெட்டு சர்ச்சையை வைத்து திமுகவினர் சமூகவலைதளங்களில் கேலி கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி இருந்தாலும் கூட ரியல் எதிர்க்கட்சி தலைவராக அண்ணாமலை தன்னை முன்னிறுத்தி அரசியல் செய்ய முயல்வது இங்கு கவனிக்கத்தக்கது. அதிமுக கோட்டைவிடக்கூடிய முக்கிய விவகாரங்களை எல்லாம் பாஜக கையிலெடுத்து போராட்டம் ஆர்ப்பாட்டம் என நடத்தி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன விவகாரம்

என்னென்ன விவகாரம்

கோயில் திறப்பு, முல்லை பெரியாறு அணை பிரச்சனை, பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்கக் கோருதல், என பல விவகாரங்களில் அதிமுகவை முந்தி அரசியல் செய்கிறது பாஜக. இதுமட்டுமல்லாமல் அமைச்சர்கள் சிலரது திரைமறைவு நகர்வுகளையும் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ந்து பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாகவே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது அக்கட்சியின் தலைமை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+