வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் தற்கொலைக்கு என்ன காரணம் தெரியுமா? சிசிடிவியை ஆய்வு செய்யும் போலீஸ்!

Google Oneindia Tamil News

வேலூர் : வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில், அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதற்கு, குடும்ப பிரச்சனை காரணம் என போலீசாரின் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் துரை மகாலிங்கம், இவரது மகள் பாரதி (55). பாரதி லத்தேரி பகுதியில், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

தகவல் கிடைத்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விரைந்து சென்று, பாரதி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 ரயில் முன்பு பாய்ந்து.. அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் தற்கொலை ரயில் முன்பு பாய்ந்து.. அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் தற்கொலை

அமைச்சரின் அண்ணன் மகள்

அமைச்சரின் அண்ணன் மகள்

திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். கடந்த ஆண்டு இவர் காலமானார். இவரது மகள் பாரதி (55). இவர் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இருக்கும் லத்தேரியில் கணவர் ராஜ்குமார் மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். பாரதி - ராஜ்குமார் தம்பதிக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் பிள்ளை ஆகியோர் உள்ளனர்.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்த நிலையில் லத்தேரியில் ரயில்வே தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் பெண் சடலம் கிடப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து உடலை கைப்பற்றி ரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்தப் பெண், துரைமுருகனின் அண்ணன் மகள் பாரதி என்பதும், அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

 காரணம் - விசாரணை

காரணம் - விசாரணை

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் பாரதி தற்கொலைக்கான காரணம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனையின் காரணமாக பாரதி தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, பாரதி குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி ஆய்வு

சிசிடிவி ஆய்வு

பாரதி தற்கொலைக்குக் காரணம் குடும்ப பிரச்சனையா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தொடர் விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
According to the initial reports of the police, a family dispute was the reason behind the suicide of Bharathi, the niece of minister Durai murugan. It is said that the police are examining the CCTV footage from there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X