கர்நாடகாவுக்கு சவால் விட விரும்பவில்லை.. உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது - துரைமுருகன்
வேலூர்: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு போட்டி போட்டி சவால்விட்டு சொல்ல விரும்பவில்லை எனவும், மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் கர்நாடக அரசின் கோரிக்கைக்கு உடன்படமாட்டார்கள் என நம்புவதாக தமிழக நீர்வளத்துரை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Recommended Video
வேலூரில் தமிழகத்திலேயே முதல்முதலாக ரோபோ மூலம் மூளை அறுவை சிகிச்சை செய்யும் முறையை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார். இதே போல் வலிப்பு நோய் கண்டறியும் மருத்துவ பிரிவை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி துவங்கி வைத்தார்.

இவ்விழாவில் மருத்துவமனையின் இயக்குநர் சம்பத், துணைதலைவர் அனிதா சம்பத் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன் பின்னர் அரியூர் தங்க கோவில் வளாகத்தில் வித்யா நேத்ரம் என்றழைக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்கினார்
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடக முதல்வர் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று கூறுவதற்கு உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் கர்நாடக அரசுக்கு உடன்படாது என நாங்கள் திடமாக நம்புகிறோம் எனவும், நாங்கள் கர்நாடகாவுக்கு போட்டி போட்டி சவால்விட்டு சொல்ல விரும்பவில்லை எனவும், மத்திய அரசு நீர்வளத்துறைக்கு ஒதுக்கிய நிதி இன்னும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை ஆனாலும் மழையால் சேதமடைந்த ஏரிகள் நீர்நிலைகளை விரைவில் புணரமைக்கப்படும் என்று கூறினார்.
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!












Click it and Unblock the Notifications