வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியின் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கே.. விவேகானந்தரை பின்பற்றுங்க! மாணவர்கள் முன் ஆளுநர் அட்வைஸ்

Google Oneindia Tamil News

வேலூர்: நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மாணவர்கள் அனைவரும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளை கேட்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    National Education Policy 2020 மாநில மொழிகளை ஊக்குவிக்கிறது - Governor RN Ravi

    காட்பாடியில் உள்ள விஐடி நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 62 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் உள்பட 8,383 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    அப்போது மாணவர்கள் முன்பாக உரையாற்றி ஆளுநர், "நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறார்.

    புதிய கல்விக்கொள்கையால் தாய்மொழி பயன்பாடு அதிகரிக்கும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! புதிய கல்விக்கொள்கையால் தாய்மொழி பயன்பாடு அதிகரிக்கும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

     விவேகானந்தர்

    விவேகானந்தர்

    இதன் மூலம் நாட்டில் அனைவருக்கும் சமமான வளர்ச்சி ஏற்படும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகளையும் பின்பற்ற வேண்டும், அப்போது நாம் நினைத்ததை அடைய முடியும். நாட்டில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வி வழங்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும். கடந்த காலங்களை விட தற்போது நம் நாட்டில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. தற்போது மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் தற்போது விஞ்ஞான வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது.

    விஞ்ஞான வளர்ச்சி

    விஞ்ஞான வளர்ச்சி

    பள்ளி மாவணவர்கள் 750 பேர் சேர்ந்து 75 சிறிய செயற்க்கைக்கோள் அனுப்பும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். இதை யோசித்து கூட பார்க்கவில்லை. அந்த அளவிற்கு இந்தியாவில் விஞ்ஞான வளர்ச்சி அதிகரித்துள்ளது. மரபுசாரா எரிசக்தி துறையில் 2030ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட்ஸ் என்ற இலக்கு வைத்தோம். ஆனால் கடந்த ஆண்டே அந்த இக்கை அடைந்துள்ளளோம். எனவே 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட்ஸ் என்ற இலக்கு வைத்துள்ளோம். அதையும் முன் கூட்டியே எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    தொழில் நிறுவனங்கள்

    தொழில் நிறுவனங்கள்

    நம் நாட்டில் ஏற்கனவே 400 ஸ்டாட் அப் நிறுவனங்கள் இருந்தன். தற்போது அவை 80 ஆயிரமாக உயந்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் கூட இப்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வந்துள்ளன. டிஜிட்டல் திட்டத்தில் இந்தியா ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளது. இவை மேலும் அதிகரிக்கும். உலக அமைதியை காக்க இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

     மாணவர்களுக்கு அறிவுரை

    மாணவர்களுக்கு அறிவுரை


    மாணவர்கள் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும், தோல்விகளை உடைத்து எறிந்து மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும், மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் சிந்தித்து செயல்பட வேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும்." என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

    English summary
    Modi plans are for National growth - Follow Vivekanandar's advices - Governor R.N.Ravi: நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மாணவர்கள் அனைவரும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளை கேட்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X