வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரண்டே போட்டோ தான்! ரோடு காண்டிராக்டர் கனவில் மண்ணை அள்ளி போட்ட அப்ரசண்டிகள்! நம்ம வேலூரில் தான்!

Google Oneindia Tamil News

வேலூர் : வேலூரில் இருசக்கர வாகனத்தை அகற்றாமல் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்துக்கு உள்ளான நிலையில் சாலை அமைத்த காண்ட்ராக்டரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மேயர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Recommended Video

    அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்? வேலூரில் பைக்கை கூட நகர்த்தாமல் புதிய சாலை அமைப்பு! பரபரப்பு

    பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு பேசும் ஒரு வசனம் தற்போது வரை சமூக வலைதளங்களில் மிக மிக பிரபலம். வேலை தெரியாதவர்களை வேலைக்கு அழைத்துச் சென்று நேசமணி படும் இன்னல்கள் படம் முழுவதும் கலகலப்பை கூட்டி இருக்கும்

    ஒரு லட்ச ரூபாய் காண்டிராக்டா மண்ண அள்ளி போட்றாதீங்கடா அப்ரசண்டிகளா! என வடிவேலு அடிக்கடி அவர்களை திட்டிக்கொண்டே இருப்பார். தற்போது இதேபோன்ற ஒரு சம்பவம் நம்ம வேலூரில் நடைபெற்றிருக்கிறது.

    அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்? வேலூரில் பைக்கை கூட நகர்த்தாமல் புதிய சாலை அமைப்பு! பரபரப்பு அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்? வேலூரில் பைக்கை கூட நகர்த்தாமல் புதிய சாலை அமைப்பு! பரபரப்பு

    வேலூரில் அதிர்ச்சி

    வேலூரில் அதிர்ச்சி

    வேலூர் மாநகராட்சியை சீர்மிகு நகரமாக மாற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவம் தான் வேலூர் மட்டுமல்லாது தமிழக மக்கள் முழுவதையும் பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.

    சிமெண்ட் சாலை

    சிமெண்ட் சாலை

    வேறு ஒன்றும் இல்லை காளிகாம்பாள் தெருவை சேர்ந்த சிவா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நேற்று முன்தினம் இரவு தனது கடை முன்பு நிறுத்திவிட்டு சென்றார் காலையில் எழுந்து வந்து பார்த்தபோதுதான் அந்த தெருவில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது அது கூட பரவாயில்லை அவ்வளவு பெரிய இருசக்கர வாகனம் நிற்பது கூட தெரியாமல் காண்ட்ராக்டர் குரூப்பில் வேலை செய்த அப்பரசண்டிகள் அந்த வாகனத்தை அகற்றாமல் அப்படியே சிமெண்ட் சாலை போட்டு விட்டு சென்று விட்டனர்.

    ஜீப்போடு ரோடு

    ஜீப்போடு ரோடு

    இதனால் அதிர்ந்து போன சிவா வாகனத்தை எடுக்க முயற்சிக்கும் முடியாததால் வேறு வழின்றி சிமெண்ட் சாலையை உடைத்து வண்டியை மீட்டார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் அதற்கடுத்ததாக இன்னொரு சம்பவமும் நடைபெற்றது. அதே வேலூரில் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிறுத்த வைக்கப்பட்டிருந்த ஓடாத பழைய ஜீப்பை அப்புறப்படுத்தாமல் ஏடாகூடமாக தார்சாலையும் போடப்பட்டது இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.

    அதிரடி உத்தரவு

    அதிரடி உத்தரவு

    இதையடுத்து மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் நேரில் வந்து கிரேன் மூலம் ஜீப்பை பெயர்த்து அப்புறப்படுத்தினார் இவை அடுத்து சாலை சீர் செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரமும் தமிழகம் முழுவதும் கண்டனங்களை பெற்றது இந்த நிலையில் தான் இருசக்கர வாகனத்தை அகற்றாமல் சிமெண்ட் சாலை போட்ட விவகாரத்தில் காண்ட்ராக்டரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் உதவி பொறியாளரும் விசாரணை நடத்தப்பட்டது. இருவரும் உறுதிய பதில் அளிக்காதால் கான்ட்ராக்டரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதோடு உதவி பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மேயர் சுஜாதா அதிரடியாக கூறியுள்ளார்.

    English summary
    Vellore mayor has ordered that the construction of cement road in Vellore without removing the two-wheeler has been severely criticized on social media, the contract of the contractor who built the road has been canceled and action will be taken against the engineer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X