வேலூர் மாவட்டத்தில் 15 துணை தாசில்தார்கள்.. ஒரே நாளில் பறந்து வந்த ஆர்டர்... அதிரடியாக இடமாற்றம்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 15 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்து மாவட்டகலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, வேலூர் தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும், கலெக்டர் அலுவலக 'எப்' பிரிவில் தலைமை உதவியாளராக பணியாற்றி வரும் விஜயலட்சுமி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தனி துணை தாசில்தாராகவும், அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுகந்தி 'எச்'பிரிவில் தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்னர்.
துணை தாசில்தார்கள், தாசில்தார்கள் அவ்வப்போது நிர்வாக வசதிக்காக இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். பெரும்பாலும் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளேயே இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஒருசில சமயங்களில் மட்டும் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள். அந்த வகைய்ல வேலூர் மாவட்டத்தில் 15 துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் 15 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்ட உத்தரவின் விவரம் வருமாறு: "காட்பாடி தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணைத் தாசில்தாராக பணியாற்றி வந்த ரகுராமன் நீதி பரிபாலன பயிற்சி முடித்து வேலூர் தாலுகா அலுவலகத்திற்கும், கலெக்டர் அலுவலக 'எப்' பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த செந்தில்குமரன் அங்கேயே தலைமை உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காட்பாடி வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்த திவ்யா கலெக்டர் அலுவலக தேர்தல் துணை தாசில்தாராக., தனி மாவட்ட வருவாய் அலுவலர் மாநில நெடுஞ்சாலைகள் (நில எடுப்பு) துணை தாசில்தாராக பணியாற்றிய திவ்யா பிரணவம் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
வேலூர் மண்டல துணை தாசில்தார் செந்தாமரை கலெக்டர் அலுவலக 'ஜி' பிரிவு தலைமை உதவியாளராகவும், கலெக்டர் அலுவலக 'எச்' பிரிவு தலைமை உதவியாளர் ஜனனி காட்பாடி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், காட்பாடி தேர்தல் துணை தாசில்தார் தேவிகலா காட்பாடி வட்ட வழங்கல் அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வேலூர் தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும், கலெக்டர் அலுவலக 'எப்' பிரிவில் தலைமை உதவியாளராக பணியாற்றி வரும் விஜயலட்சுமி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தனி துணை தாசில்தாராகவும், அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுகந்தி 'எச்' பிரிவில் தலைமை உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் தனி துணை தாசில்தாராக பணியாற்றி வந்த குமார் காட்பாடி தேர்தல் துணை தாசில்தாராகவும், பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துணை தாசில்தாராகவும், குடியாத்தம் தேர்தல் துணை தாசில்தார் தனலட்சுமி பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூர் தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சந்தியா குடியாத்தம் தேர்தல் துணை தாசில்தாராகவும், காட்பாடி தலைமையிடத்து துணை தாசில்தார் சிவக்குமார் காட்பாடி மண்டல துணை தாசில்தாராகவும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்." இந்த உத்தரவை கலெக்டர் சுப்புலட்சுமி பிறப்பித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications