Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க இழுத்தடிப்பா? தவெக குற்றச்சாட்டுக்கு போலீஸ் கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 5 நாட்களுக்கு முன்பு தான் மனு அளித்திருந்தும் 22 ஆம் தேதியே அதாவது 4 நாட்களிலேயே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்து, வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்து காவல் துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அளிக்கப்பட்டதாக வேலூர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மனு அளிக்கப்பட்ட 4 நாட்களில் உரிய அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

விஜய்யின் வேலூர் கூட்டத்திற்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பே காவல் துறையினரிடம் அனுமதி பெற போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகதான் காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

Vellore Police Deny Delay in Granting Permission for Vijay Meeting Say Approval Given Within Four Days

அனுமதி மறுப்பதாக தவெகவினர் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்டந்தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியினை நடத்தி வருகிறார். இதில் போலீசார், தமிழக அரசு கூட்டத்திற்கு அனுமதி வழங்க தாமதம் செய்வதாகவும், கூட்டத்துக்கு பெர்மிஷன் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்வதாகவும் தொடர்ந்து தவெகவினர் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திலும் கூட விஜய் உள்பட தவெகவினர் பலரும் போலீசார் மீதும் தமிழக அரசு மீதும் பலி போட்டு வருகிறார்கள். இந்த சூழலில் தான் இன்று தவெகவின் வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் விஜய் கலந்து கொண்டு திமுகவை விமர்சனம் செய்து பேசினார். முன்னதாக தவெக நிர்வாகிகள் பலரும் வேலூர் மக்கள் சந்திப்பிற்கு அனுமதி கேட்டு ஒன்றரை மாதமாக போராடியதாகவும் ஆனால் போலீசார் காலம் தாழ்த்தியதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர்.

இந்த நிலையில் 5 நாட்களுக்கு முன்பு மனு அளித்திருந்தும் 4 நாட்களிலேயே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்து, வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்து காவல் துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை வழங்கப்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக வேலூர் காவல்துறையினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

காவல்துறையினர் விளக்கம்

நேற்று 22.02.2026 அன்று, தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, வேலூர் மாவட்டத்தின் தவெக கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சியின் தலைவர் நிகழ்ச்சிக்காக கடந்த ஒன்றரை மாதங்களாக அனுமதி கோரி போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி கடிதம் கிடைத்ததாகவும், கடிதத்தை பார்த்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 28.01.2026-ம் தேதி, தவெக கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை 08.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் தங்கள் கட்சியின் தலைவர் மற்றும் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அனுமதி கோரி மனு அளித்தார். இதுகுறித்து காவல் துறை சார்பில் 30.01.2026 அன்று மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றி தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசாணை எண்.05-ன் படி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது.

இந்நிலையில் 05.02.2026 அன்று தவெக நிர்வாகம் சார்பாக "சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது ஆதலால், நாங்கள் எங்கள் தலைமையிடம் மாற்று தேதி கேட்டு தங்களிடம் மீண்டும் மனு கொடுக்க உள்ளோம்" என மனு அளித்தார்.

25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள்

மீண்டும், 06.02.2026-ம் தேதி அன்று தவெக நிர்வாகம் சார்பாக மேற்படி நிகழ்ச்சியை 23.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் என மனு அளித்தார். இதுகுறித்து நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்ட நிலையில் 18.02.2026 அன்று அளித்த மணுவில் "வேலூர் மாவட்டத்தில் 23.02.2026 அன்று எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு 06.02.2026 அன்று கடிதம் கொடுத்திருந்தோம்.

அந்த நிகழ்வில் பொதுமக்கள் 25,000 கலந்துகொள்ள அனுமதி கேட்டிருந்தோம்". "மேலும் இந்த சந்திப்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 4900 பேர் கலந்துகொள்ள திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" இதுதொடர்பாக காவல் துறையினரால் 19.02.2026-ம் தேதியன்று நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. அதற்கான தகவல்கள் அடங்கிய பதிலுரையினை தமிழக வெற்றிக் கழகத்தினர் 20.02.2026-ம் தேதி சமர்பித்தனர்.

முற்றிலும் உண்மைக்கு புறம்பானது

தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 5 நாட்களுக்கு முன்பாக மனு அளித்திருந்த போதிலும் பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்தும் 22.02.2026-ம் தேதி காவல் துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதமும் செய்யாமல் மனு அளிக்கப்பட்ட நான்கு நாட்களில் உரிய அனுமதி வழங்கப்பட்டது.

தவெக கட்சி நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காவல் துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதங்களாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகதான் காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது என கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

10,000 பேர் கூடினர்

மேலும், தவெக கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது. ஆனால், இன்று 23.02.2026-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மணுவில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது.

இச்செயலானது மாண்பமை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+