குடியாத்தம் கள்ளக்காதலியிடம் டக்னு பேசல.. வழக்கறிஞர் வீட்டுக்கே வந்த 4 பெண்கள்! வெலவெலத்த வேலூர்
வேலூர்: 5 வருடங்களாக நன்றாக பழகி பேசி வந்தவர், திடீரென பேசுவதை நிறுத்திவிட்டால் என்ன செய்வது? அவரிடம் நேரில் போய் கேட்கலாம்.. அல்லது சமாதானம் பேசலாம்.. ஆனால், குடியாத்தத்தில் இந்த விவகாரம் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ஒரு வீட்டில் நடந்த சாதாரண வாக்குவாதம், 40 வயது நபரின் உயிரையே பறித்திருக்கிறது. இந்த கொடூரத்தை செய்தது, இளம்பெண்கள் என்ற தகவல், வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. அப்படி என்னதான் நடந்தது?
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கதிரவன்.. 40 வயதான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.. காட்பாடியில் உள்ள தனியார் டிராக்டர் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார்.. கதிரவன் வழக்கறிஞர் படிப்பையும் முடித்திருந்தார்.

குடியாத்தம் வழக்கறிஞர்
குடியாத்தம் அருணாச்சல நகரைச் சேர்ந்தவர் நட்சத்திரா (36). இவருக்குத் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில்தான், சுமார் 5 வருடங்களுக்கு முன்பு கதிரவனுக்கும் நட்சத்திராவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் திருமணம் மீறிய உறவாக மாறியிருக்கிறது.. இதனால் நட்சத்திராவின் வீட்டுக்குக் கதிரவன் சென்று வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.
டக்னு பேசாமல் போன கதிரவன்
இப்படியே சென்றுகொண்டிருந்த இவர்களது உறவில் கடந்த சில மாதங்களாகப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது... இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகளும் வந்து போயுள்ளன.. இதனால் நட்சத்திராவிடம் பேசுவதையும் பழகுவதையும் கதிரவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது... நட்சத்திரா பலமுறை பேச முயன்றும் கதிரவன் பேச மறுத்துள்ளார்.. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.
இதுபற்றி நட்சத்திரா தனது அக்கா அமுதாவிடம் (55) முறையிட்டுள்ளார்.. இதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த, அக்காவும், தங்கையும், நேரடியாக கதிரவனின் வீட்டுக்கே சென்று அவரிடம் பேச முடிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணிக்கு, நட்சத்திரா, அமுதா, அமுதாவின் மகள்கள் பிரபாவதி (34), லட்சுமி (32) ஆகிய 4 பேரும் கதிரவனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
4 பெண்கள் அதிர்ச்சி சம்பவம்
அங்கு கதிரவனிடம், நட்சத்திராவுடன் ஏன் பேசுவதை நிறுத்திவிட்டாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.. இந்த சாதாரண வாக்குவாதம், தகராறாக முற்றியிருக்கிறது.. பிறகு நட்சத்திரா உள்ளிட்ட 4 பெண்களும் சேர்ந்து கதிரவனை பலமாக தாக்கி விட்டார்கள். இதில் கதிரவன் நிலைதடுமாறி கீழே மயங்கி விழுந்து விட்டார்..
கதிரவன் மயங்கிக் கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிறகு அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இறுதியில் கதிரவனை கொன்ற நட்சத்திரா, அமுதா, பிரபாவதி, லட்சுமி ஆகிய 4 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. இதில் நட்சத்திரா - அமுதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..
5 வருடங்களாக நீடித்த கள்ள உறவில் ஏற்பட்ட பிரச்சனை, கடைசியில் கதிரவனின் உயிரிழப்பில் முடிந்திருப்பது குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!


Click it and Unblock the Notifications
