பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!
விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் மீதான அதிருப்தி காரணமாக விழுப்புரம் நகர தெற்கு செயலாளர் பசுபதி விலகுவதாக அறிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக நிர்வாகிகளை சிவி சண்முகம் மதிப்பதில்லை என்று குற்றம்சாட்டிய பசுபதி, தனது ஆதரவாளரை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் தேர்வு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. அந்த வகையில் 2021 சட்டசபைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட சிவி சண்முகம், திமுக வேட்பாளர் லட்சுமணனிடம் தோல்வி அடைந்தார். அவரும் முன்னாள் அதிமுக நிர்வாகி என்பதால், திமுகவில் பொறுப்புக்கு வந்தபின் தொகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்.

இதனால் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று ஆலோசித்த சிவி சண்முகம், இம்முறை மயிலம் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். மயிலம் தொகுதியில் தேர்தல் பணிகளை தனது அண்ணன் மூலமாக மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சிவி சண்முகத்திற்கு எதிரானவே அதிமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சிவி சண்முகம் மீதான அதிருப்தி காரணமாக அதிமுகவில் இருந்து அக்கட்சியின் விழுப்புரம் நகர தெற்கு செயலாளர் பசுபதி விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகிய பசுபதி, சிவி சண்முகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளார். சிவி சண்முகம் தனது பினாமிகளுக்கும், தனது சமூகத்தினருக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
விழுப்புரம் தொகுதியில் சிவி சண்முகத்தின் பினாமிகளுக்கு வாய்ப்பு அளிக்க முயற்சித்து வருகிறார். அதேபோல் தாம் தோல்வி அடைந்த விழுப்புரம் தொகுதியில் வேறு யாரும் வெற்றி பெற்றுவிட கூடாது என்பதில் சிவி சண்முகம் குறிப்பாக இருப்பதாகவும், உழைக்கும் நிர்வாகிகளுக்கு சிவி சண்முகம் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
விழுப்புரம் தொகுதியில் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சிவி சண்முகம் பரிந்துரைத்ததாக தெரிகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் பசுபதி கொந்தளித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவின் பவர் சென்டரான சிவி சண்முகத்திற்கு எதிராக நிர்வாகிகள் வெடித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications