செஞ்சி சிறுமி வழக்கில் ட்விஸ்ட்.. அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளை யார்? தம்பி பக்கம் திரும்பிய CBCID

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம், தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் சிபிசிஐடி விசாரணையில் அடுத்தடுத்து புதிய உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு, படுக்கையறையில் உறங்கிய குழந்தை அதிகாலையில் மாயமானார்.

வழக்கின் ஆரம்பத்திலிருந்தே காவல்துறையினருக்குப் பெரிய புதிராக இருந்தது, "கடந்த 6 ஆண்டுகளாக ஒருமுறை கூட சிறுமிக்குக் குடும்பத்தினர் பிறந்தநாள் கொண்டாடியதில்லை; ஆனால், குழந்தை மாயமான அன்று இரவு மட்டும் திடீரென கேக் வெட்டி விமரிசையாகக் கொண்டாடியது ஏன்?" என்ற கேள்விதான். தற்போது இந்தக் கேள்விக்கான விடை மற்றும் அந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பின்னணி சிபிசிஐடி விசாரணையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

Gingee Missing Girl Case

அக்காவுக்குப் பார்த்த வரனும்... பிறந்தநாள் செலவுக்கு வந்த ₹2,000 பணமும்!

சென்னையில் நர்சிங் படித்து வரும் சிறுமியின் 18 வயது மூத்த சகோதரி விஜயலட்சுமிக்கு, குடும்பத்தினர் சமீபகாலமாகத் தீவிரமாகத் திருமண வரன் பார்த்து வந்துள்ளனர்.

அப்போது பேசப்பட்ட ஒரு மாப்பிள்ளை வீட்டாருடன் குடும்பத்தினருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான், அக்டோபர் 11 அன்று சிறுமிக்கு 7 வயது முடிவடைவதை அறிந்த மாப்பிள்ளையின் தம்பி, பிறந்தநாள் செலவுகளுக்காக சிறுமியின் குடும்பத்தினருக்குத் தனது சொந்தப் பணத்திலிருந்து ₹2,000 அனுப்பியுள்ளார்.

நேரில் வந்து கேக் வெட்டிய மாப்பிள்ளை வீட்டார்

பணம் அனுப்பியது மட்டுமல்லாமல், சிறுமிக்குத் தானே முன்னின்று பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில், மாப்பிள்ளையின் தம்பியே சொந்தமாகப் பிறந்தநாள் கேக் வாங்கிக்கொண்டு தனது தாயுடன் ஆலம்பூண்டியில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு நேரில் வந்துள்ளார்.

அங்கு குடும்பத்தினர் அனைவரையும் ஒன்று கூட்டி, கேக் வெட்டி இனிப்புகள் வழங்கிப் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். அன்றைய தினம் எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும்தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்து வருகின்றன. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் தூங்கச் சென்ற சில மணி நேரங்களிலேயே குழந்தை மாயமாகியுள்ளார்.

மாப்பிள்ளையின் தம்பியிடம் சிபிசிஐடி துருவல் விசாரணை

திடீர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பின்னால் ஏதேனும் சதித்திட்டம் இருந்ததா அல்லது கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கம் ஏதேனும் இருந்ததா என்பதைக் கண்டறிய, கேக் வாங்கிக் கொடுத்த மாப்பிள்ளையின் தம்பியை சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் வரவழைத்துத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்:

கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் எந்த நேரத்தில் வந்தார்? பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு அவர் எத்தனை மணி வரை அந்த வீட்டில் தங்கியிருந்தார்? குடும்பத்தினருடன் பேசும்போது ஏதேனும் வாக்குவாதங்களோ அல்லது அசாதாரணச் சூழலோ நிலவியதா? நள்ளிரவில் அவர் தனது தாயுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றாரா அல்லது அங்கேயே தங்கியிருந்தாரா?

என்பது குறித்து அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் விரிவாகப் பதிவு செய்துள்ளனர்.

அக்காவிடம் தொடரும் விசாரணை

நர்சிங் படித்து வரும் மூத்த சகோதரி விஜயலட்சுமியிடமும் ஆலம்பூண்டி பள்ளி முகாம் அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மாப்பிள்ளை வீட்டாருக்கும், தந்தை வடிவேலுவுக்கும் இடையே திருமணப் பேச்சுவார்த்தையில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்ததா அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் ஏதேனும் நிலவியதா என்ற கோணத்திலும் வாக்குமூலங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

"6 வருஷமாக இல்லாத திடீர் பர்த்டே பார்ட்டி ஏன்?" என்ற பெரும் சந்தேகத்திற்கு விடை கிடைத்துள்ள நிலையில், பிறந்தநாள் முடிந்த நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து குழந்தையைத் தூக்கிச் சென்றது யார் என்ற அடுத்தகட்ட மர்மத்தை உடைக்க சிபிசிஐடி அதிகாரிகள் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர். குடும்பத்தினர், திருமண வரன் தரப்பினர் மற்றும் அண்டை வீட்டார் அளித்த அனைத்து வாக்குமூலங்களும் தற்போது இறுதி செய்யப்பட்டு வருவதால், இந்த வழக்கில் மிக விரைவில் உறுதியான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+