செஞ்சி சிறுமி மாயமான வழக்கு.. ஆடு மேய்க்கும் அரவிந்த்திடம் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: செஞ்சியில் சிறுமி காணாமல் போன வழக்கில் ஆடு மேய்க்கும் இளைஞர் அரவிந்த் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட ராஜதுரையுடன் தொடர்பில் இருந்த அரவிந்த் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் இளைய மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி (வயது 7). இவர் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி இரவு, தனது பிறந்தநாளை கொண்டாடி முடித்து விட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை அவர் வீட்டில் இருந்து மாயமானார்.

Gingee Missing Girl Case

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடினர். காவல்துறை சார்பில் சிறுமியை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ட்ரோன்கள், மோப்ப நாய்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இதனிடையே, போலீஸ் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனக் கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சிறுமி மாயமாகி 22 நாட்களுக்கு மேலான நிலையில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

சிறுமியின் தாயார் பவானியிடமும், பின்னர் சிறுமியின் தாய் தந்தை இருவரிடமும் அவர்களது வீட்டுக்கு அருகே உள்ள அரசு பள்ளியில் வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். சிறுமி காணாமல் போனது தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பி, துருவித் துருவி விசாரித்துள்ளனர். இந்த விசாரணை முழுவதையும் சிபிசிஐடி போலீசார் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு 14 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றர். இதில் சந்தேக நபர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு ஆலம்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களில் பணிபுரிபவர்களிடம் அந்த புகைப்படங்களை காண்பித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி காணாமல் போன வழக்கில் ஆடு மேய்க்கும் இளைஞர் அரவிந்த் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரையுடன் தொடர்பில் இருந்த அரவிந்த்திடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிதடி வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் ராஜதுரையைச் சிறையிலிருந்து அழைத்து வந்து சிபிசிஐடி அதிகாரிகள் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

ராஜதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது நண்பரான ஆடு மேய்க்கும் அரவிந்த் பற்றி தெரியவந்துள்ளது. நீண்டகாலமாக அப்பகுதியில் ஆடு மேய்க்கும் அரவிந்த் காட்டுப்பாதைகளை நன்று அறிந்தவர். அவருக்கு சிறுமி மாயமான வழக்கில் கூடுதல் தகவல்கள் தெரிந்திருக்கலாம் என்ற அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் அரவிந்த்தை காட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் அரவிந்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+