வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எனக்கே கூட சீட் கிடைக்காமல் போகலாம்! நொந்து பேசிய பொன்முடி
விழுப்புரம்: வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் எனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் இன்று நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் வாக்குச் சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: வரும் சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் யார் வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம்.

ஏன் எனக்கே கூட சீட் கிடைக்காமல் போகலாம். ஆனால் மு.க.ஸ்டாலின் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவருக்காக நீங்கள் எல்லாரும் உழைக்க வேண்டும். இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார். இது பொன்முடி ஆதரவாளர்களுக்கும் விழுப்புரம் மாவட்டத்து உடன்பிறப்புகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்து திமுகவில் முக்கியமானவராக இருப்பவர் பொன்முடி. திமுக ஆட்சி எப்போது அமைத்தாலும் அவர் உயர்கல்வித் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை பெறுவார். கருணாநிதிக்கு நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர். இந்த நிலையில் திமுக ஆட்சியிலும் அவருக்கு உயர் கல்வித் துறை ஒதுக்கப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்ற போது அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பிறகு உச்சநீதிமன்றத்தில் தடை பெற்ற நிலையில் மீண்டும் அவர் அதே துறையின் அமைச்சரானார். ஆனால் அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு வனத்துறை கொடுக்கப்பட்டது. அவரிடம் இருந்த உயர் கல்வித் துறை கோவி செழியனுக்கு ஒதுக்கப்பட்டது.
இதுவே பொன்முடி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சுமுக உறவில் பொன்முடி இல்லாததால் உயர்கல்வித் துறை சார்ந்த மசோதாக்களில் அவர் கையெழுத்திடாமல் உள்ளதாக புகார்கள் எழுந்ததால் முதல்வர் ஸ்டாலின் அப்படியொரு மாற்றத்தை கொண்டு வந்தார் என்கிறார்கள்.
இன்னும் சிலரோ ஆளுநர், மத்திய அரசுடன் நேரடி தொடர்பில் இருக்கும் துறைகளை விட்டுவிட்டு வேறு துறை ஒதுக்க வேண்டும் என பொன்முடியின் உறவினர்கள் கேட்டதாக சொல்கிறார்கள். ஆயினும் முதல்வர் ஸ்டாலினின் எதிர்பார்ப்புபடி இந்த துறையை மிக சிறப்பாக வழிநடத்துவேன் என பொன்முடி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2026 இல் தனக்கே சீட் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என ஏதோ அவர் பூடகமாக சொல்வது போல் இருப்பதாகவே அவரது ஆதரவாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications