மகன் இடத்தில் மகள்.. மேடையில் அமர வைக்கப்பட்ட காந்திமதி.. ராமதாஸ் செயற்குழுவில் அரங்கேறிய சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்திய செயற்குழு கூட்டத்தில் அவரின் மகள் காந்திமதி மேடையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. காந்திமதியின் மகன் முகுந்தனை இளைஞரணி செயலாளராக ராமதாஸ் நியமனம் செய்த போதுதான், அன்புமணி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது காந்திமதியும் பாமக மேடையில் அமர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடங்கியது. பாமகவின் இளைஞரணி தலைவர் பதவிக்கு முகுந்தன் பரசுராமனை ராமதாஸ் நியமனம் செய்தார். இதனை மேடையில் இருந்தே அன்புமணி கடுமையாக எதிர்த்தார். முகுந்தன் பரசுராமன் ராமதாஸின் பேரனாவார்.

Ramadoss s Daughter Gandhimathi Appears on PMK Stage Amid Party Rift

ராமதாஸ் vs அன்புமணி

ராமதாஸின் மூத்த மகளான காந்திமதியின் மகன் முகுந்தன். இவருக்கு பதவி கொடுத்ததற்காக அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் ஏப்ரல் மாதத்தில் உச்சத்திற்கு சென்றது. அப்போது பாமக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக முகுந்தன் கடிதம் எழுதினார். ஆனாலும் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றது.

இரு பிரிவாக பாமக

அதேபோல் செளமியா அன்புமணியின் அரசியல் வருகைக்கும் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சொந்த குடும்பத்தில் இருந்து அன்புமணிக்கு பின் யாரும் அரசியலுக்கு வரக் கூடாது என்பதே விருப்பம் என்றும் கூறி இருந்தார். தற்போது பாமக ராமதாஸ் தலைமையிலும், அன்புமணி தலைமையிலும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

ராமதாஸ் செயற்குழு கூட்டம்

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி, எம்எல்ஏ அருள், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேடைக்கு வந்த காந்திமதி

இதன் மூலமாக ராமதாஸ் கட்சிக்குள் தனக்கு இருக்கும் ஆதரவையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனிடையே செயற்குழு கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகளான காந்திமதி கலந்து கொண்டிருந்தார். அவர் முதலில் நிர்வாகிகளுடன் அமர வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென பாமக நிர்வாகிகள் அவரை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். அதனை ராமதாஸ் பார்த்து எதுவும் சொல்லவில்லை.

அடுத்தது என்ன?

அனைவருக்கும் வணக்கம் கூறிய அவர், அமைதியாக மேடையில் அமர்ந்திருந்தார். இதன் மூலமாக காந்திமதியும் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே காந்திமதியின் மகன் முகுந்தனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது நேரடியாக காந்திமதி பாமக செயற்குழுவில் பங்கேற்றிருப்பது கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+