விருதுநகர் பெண் பாலியல் வழக்கு.. வேகம் எடுக்கும் சிபிசிஐடி விசாரணை.. கைதான 4 பேரின் செல்போன்கள் ஆய்வு
விருதுநகர்: பட்டியலின இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரின் செல்போன்களை சைபர் கிரைம் ஆய்வுக்கு சிபிசிஐடி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
விருதுநகரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயது பட்டியலின இளம்பெண்ணை திமுக இளைஞரணி நிர்வாகிகள் இருவர், பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் திமுக இளைஞரணியை சேர்ந்த ஹரிஹரன் காதலிப்பதுபோல் நடித்து தனிமையில் இருந்தபோது அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி, தனது நண்பர்கள் உட்பட மொத்தம் 8 பேருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார்.

8 பேர் அதிரடி கைது
தனக்கு உதவுவதாக கூறிய மாடசாமி என்பவரும் வீடியோவை பெற்றுக்கொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக அந்த பெண் காவல்நிலையத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகி ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவிலிருந்து நீக்கம்
இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஜூனைத் அகமதை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகர் இளம்பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்க்கையை சீரழித்ததற்கு திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்
இது குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் எனவும் உறுதி அளித்தார்.

வழக்கு விசாரணை தீவிரம்
இதனை தொடர்ந்து வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் தொடக்கத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள், அவர் கடந்த மாதங்களில் யார் யாருடன் பேசியுள்ளார். அவரை செல்போனில் மிரட்டியவர்கள் யார் என்று விசாரித்தனர்.

கைதானவர்களின் செல்போன்கள் ஆய்வு
இளம் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை ஈடுபட்டதாக கைதானவர்களின் வீடுகளிலும் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர். அத்துடன் அவர்களின் உறவினர்கள், நெருக்கமானவர்களிடம் விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து சைபர் கிரைம் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதில் 4 பேரின் கால் ரிஜிஸ்டர் தொடங்கி அவர்கள் பதிவு செய்த வீடியோவை யார் யாருக்கெல்லாம் பகிர்ந்திருக்கிறார்கள் என்ற தகவலை திரட்டி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications