'அரசியலில் ஒவ்வொரு நாளும் சித்ரவதை அனுபவிக்கிறேன்'.. கண்கலங்கிய துரை வைகோ
விருதுநகர்: எனக்கு அரசியல் பிடிக்காது. அரசியல்வாதிகளையும் பிடிக்காது. ஆனால், எனது கால சூழ்நிலையால் பிடிக்காத அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தலைவர் வைகோ மற்றும் ம.தி.மு.க இயக்கத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டு நான் அரசியலுக்கு வந்தவன் என்றும், அரசியலில் நான் சந்தோஷமாக இல்லை. ஒவ்வொரு நாளும் சித்ரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்று துரை வைகோ கண்கலங்கிப் பேசினார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சிப்பிப்பாறையை சேர்ந்த மதன்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி மியான்மர் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த இளைஞருக்கு முறையான பணி வாய்ப்பு, உணவின்றி தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்து துரை வைகோ எம்.பி. வெளியுறவு துறை அமைச்சகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி மதன்ராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை மீண்டும் நாடு திரும்பிவர உதவியுள்ளார்.

முக்கியப் பதவி
இதைத்தொடர்ந்து, சிப்பிப்பாறையில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் துரை வைகோ எம்.பி. கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், எனக்கு அரசியல் பிடிக்காது. அரசியல்வாதிகளையும் பிடிக்காது. ஆனால், எனது கால சூழ்நிலையால் பிடிக்காத அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தலைவர் வைகோ மற்றும் ம.தி.மு.க இயக்கத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டு நான் அரசியலுக்கு வந்தவன். அரசியலுக்கு வந்த பின்னர் நமது இயக்கத்தில் முதன்மைச் செயலாளர் என்ற முக்கியப் பதவியைக் கொடுத்துள்ளனர்.
கனவில் கூட நினைக்கவில்லை
முக்கியமான தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளேன் இதனை நான் தேடிப் போகவில்லை. எனக்கு தானாகவே வந்தது. நாம் ஒன்று நினைக்க, கடவுள் ஒன்று நமக்கு வைத்திருப்பார். அதுபோல தான் எனக்கும் நடந்தது. நான் முக்கியமான தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்படுவேன் என கனவில் கூட நினைத்தது கிடையாது.
அரசியலில் நான் என்னுடைய பயணத்தை ஆரம்பிக்கும்போது ஆதாயம் இல்லா மக்கள் பணி, சமரசம் இல்லா மக்கள் நலன் என்ற அடைமொழி எனக்கு இயற்கையாகவே வந்தது. இன்றைக்கு அரசியல் என்றாலே எல்லா பதவிகளுக்கும் முதலீடு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. எந்த சாதியை சேர்ந்தவர், எந்த மதத்தைச் சார்ந்தவர் அவர் எவ்வளவு பணம் கொண்டு வருவார், எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதுதான் இன்றைய அரசியலாக உள்ளது.
சித்ரவதை அனுபவிக்கிறேன்
ஆனால், என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது பொது சேவை நிறைந்த வாழ்க்கைதான் பொதுவாழ்க்கை. அதுதான் அரசியல். இது யாரும் எனக்கு சொல்லிக் கொடுக்கவில்லை. இறை நம்பிக்கை எனக்கு கிடையாது. ஆனால், அரசியலில் வந்த பிறகு இறை நம்பிக்கை அதிகமாகிவிட்டது. ஏதோ ஒன்று வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
எப்போது அரசியலை விடுவேன் என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அரசியலில் நான் சந்தோஷமாக இல்லை. ஒவ்வொரு நாளும் சித்ரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்று நா தழுதழுக்கப் பேசினார். மக்கள் மன மலர்ச்சியோடு, மாறுதல் சிந்தனையோடு செயல்பட்டால் என்னை விட சிறப்பாக செயல்படும் பல்லாயிரக்கண்கான இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள்.
விஜய் கூட்டத்தைவிட 10 மடங்கு
அந்தக் காலத்தில் வைகோ கூட்டத்தைக் காண்பதற்கு விஜய்க்காக தற்போது வரும் இளைஞர் கூட்டத்தை விட 10 மடங்கு அதிகளவிலான இளைஞர்கள் கூட்டம் வந்தார்கள். ஆனால், அதில் தற்போது கால் சதவீதம் கூட யாரும் வருவது கிடையாது. தாய்மார்களுக்கு மன மாற்றம் ஏற்பட்டால் அரசியலில் நல்லவர்களும் என்னைப் போன்ற இளைஞர்களும் லட்சக்கணக்கானோர் வருவார்கள். மக்கள் மனதில் ஒரு மாற்றம் வந்தால் அரசியலிலும் கட்டாயம் மாற்றம் வரும் என்று பேசினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications