திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ்.. திடீரென பல்டியடித்த மாணிக்கம் தாகூர்.. இந்த பதிலை கவனிச்சீங்களா
விருதுநகர்: திமுக கூட்டணியில் இன்று தேமுதிக இணைந்தது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் காங்கிரஸ் கட்சி வெளியே போய்விடும் என்ற கருத்து இருக்கிறதே என்ற கேள்விக்கு மாணிக்கம் தாகூர் அது பொய்யான கருத்து என்று கூறினார். இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் என்பதை உறுதி செய்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு வேண்டும். கடந்த முறையை 25 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதல் சீட் வேண்டும் என்று போர்க்கொடிஉயர்த்தி உள்ளது.

இது திமுக கூட்டணியி் காங்கிரஸ் தொடருமா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இதற்கிடையே தான் திடீர் ட்விஸ்ட்டாக இன்று விஜயகாந்தின் தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினை இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர்.
இந்நிலையில் தான் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று மாணிக்கம் தாகூர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்பதிலளித்தார். அப்போது, ‛‛திமுக கூட்டணியில் தேமுதிக வந்து சேர்ந்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மாணிக்கம் தாகூர், ‛‛மகிழ்ச்சியான செய்தி.. எந்தவொரு கட்சி கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் சரி.. அது மகிழ்ச்சியாக தான் இருக்கும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அதனை வரவேற்றுள்ளார். தமிழக காங்கிரஸ் சார்பில் நானும் அதனை வரவேற்கிறேன்'' என்றார்.
இதையடுத்து, ‛‛திமுக கூட்டணியில் தேமுதிக உள்ளே வந்ததால் காங்கிரஸ் வெளியே போய்விடும் என்ற கருத்து இருக்கிறதே'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணிக்கம் தாகூர், ‛‛இது பொய்யான கருத்து என்று நினைக்கிறேன்.
எங்களை பொறுத்தவரை பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியதுபோல் கிரிஷ் சோடங்கர் சொன்னது போல் எங்களுடைய உறவு நீண்டகால உறவு. இப்போது பேசுவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழு அமைத்த பிறகு காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தும். இந்த பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கிறோம்'' என்றார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications