ராஜபாளையம் "ராணி".. கவர்ச்சி வலையில் விழுந்த மாஸ்டர்..விருதுநகர் கல்லறை தோட்டத்தில்.. ஐயோ 2வது மனைவி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டமே விக்கித்து போயுள்ளது.. யாரிந்த பெண் காளீஸ்வரி? 2வது மனைவி போட்ட மாஸ்டர் பிளானில், சிக்கிய நபர்கள் யார் யார்?
ராஜபாளையம் பழைய ஸ்டாண்ட் முன்பாக 50 வருடங்களுக்கும் மேலாக ஸ்வீட் ஸ்டால் நடத்தி வந்தவர் குருசாமி.. இவர் இறந்துவிட்டதால், இவரது மகன் சிவக்குமார் அந்த கடையை நடத்தி வருகிறார். இப்போது சிவக்குமாருக்கு 43 வயதாகிறது.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. குழந்தையும் இருக்கிறது.. ஆனால், அந்த திருமணம் பிடிக்காத நிலையில், முறைப்படி டைவர்ஸ் வாங்கிக்கொண்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார்.
2வது மனைவி: இந்த 2வது மனைவி பெயரை காளீஸ்வரி.. 23 வயதுதான் ஆகிறது.. நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்.. சிவக்குமாரை விட, 20 வயது குறைந்தவர்
இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த தீபாவளியை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால், இதே நாளில்தான், சிவக்குமாரின் அப்பா குருசாமி இறந்துவிட்டார். அதனால், நினைவு தினம் என்பதால் மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு ராஜபாளையம் சஞ்சீவி மலை அடிவாரத்திலிருக்கும், அப்பாவின் கல்லறை தோட்டத்திற்கு அஞ்சலி செலுத்த போயிருக்கிறார்.
சிவக்குமார்: அப்போது அந்த கல்லறை தோட்டத்தில் 4 பேர் உட்கார்ந்து தண்ணி அடித்து கொண்டிருந்திருக்கிறார்கள். அதனால், அவர்களை சிவக்குமார் கண்டித்துள்ளார்.. உடனே போதையிலிருந்த அந்த நபர்களும், சிவக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு போயிருக்கிறார்கள். சிறிது நேரத்தில், ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு, பதறியடித்து கொண்டு ஓடிவந்தார் காளீஸ்வரி.. தன்னுடைய கணவனை யாரோ அடித்து போட்டுவிட்டார்கள் என்று கதறி அழுதார்.
இதனால் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, சிவக்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்திருக்கிறார். அதைப்பார்த்ததுமே போலீசாருக்கு சந்தேகம் கிளபியது.. உடனடியாக தனிப்படை இறக்கப்பட்டது.. ஆனால், கணவன் இறந்த அதிர்ச்சி எதுவுமே இல்லாமல், கேஷூவலாக காணப்பட்டுள்ளார் காளீஸ்வரி.. இதையடுத்து, காளீஸ்வரியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தார்கள் போலீஸார்.
காளீஸ்வரி: அப்போது காளீஸ்வரி தந்த வாக்குமூலம் இதுதான்: சிவக்குமாரை 2வது திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததே, சொத்துக்களுக்காகத்தானாம்.. பஸ் நிலையம் எதிரே சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள ஸ்வீட் ஸ்டால், ஏகப்பட்ட வீடுகள், பல ஏக்கர் நிலங்கள், அறக்கட்டளை சொத்துக்கள் இப்படி அனைத்திலுமே காளீஸ்வரியின் குறி விழுந்துள்ளது.
இதனிடையே, கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் நெருக்கம் இருப்பது தெரியவந்ததுமே அதிர்ந்து போனார். எனவே, மொத்த சொத்தையும் தனிநபராக அனுபவிக்க முடிவு செய்தார் காளீஸ்வரி. இந்த நேரத்தில்தான், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த யோகா மாஸ்டர் அய்யப்பன் என்பவரிடம் யோகா கற்றுக்கொள்ள போனார் காளீஸ்வரி.. நாளடைவில் யோகா மாஸ்டரையும் கள்ளக்காதலில் வீழ்த்தி, வலையில் விழ வைத்தார்.
சொத்துக்கள்: இப்போது, சொத்துக்களை அபகரிக்க மெல்ல மெல்ல ஸ்கெட்ச் போட்டார் காளீஸ்வரி.. முதலில், சிவக்குமாரிடம் ஒரு சில சொத்துக்களை, தன்னுடைய பிள்ளையின் எதிர்கால நலனுக்கு தேவை என்று சொல்லி, மாற்றி எழுதி வாங்கி கொண்டார்.. பிறகு, யோகா மாஸ்டர் அய்யப்பனுக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி ரூ.6 லட்சம் பணம் வாங்கியுள்ளார். பிறகு, தனக்கு சொந்தமான வீட்டிலேயே யோகா மாஸ்டரை வாடகைக்கு குடியமர்த்தியிருக்கிறார்
தினம் தினம் இவர்களின் கள்ளக்காதல் அட்டகாசங்கள் எல்லைமீறி சென்ற நிலையில், சிவக்குமாருக்கு இதை பற்றி ஒருநாள் தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிடும்படி மனைவியை கண்டித்துள்ளார்..
பிடிவாதம்: ஆனால், காளீஸ்வரி, பிடிவாதமாக மறுத்துவிட்டார். அப்படியானால், 2 பேருக்கும் திருமணம் செய்து வைப்பதாக சிவக்குமார் சொல்லி உள்ளார். ஆனால், சிவக்குமாரின் பேச்சை நம்பாத காளீஸ்வரி, அவரையே கொலை செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். தீபாவளி பண்டிகையன்று, எப்படியும் கல்லறை தோட்டத்துக்கு செல்லக்கூடும் என்பதால், அங்கேயே கணவரை கொலை செய்ய நாள் குறித்தார்..

அய்யப்பன், விக்னேஸ்வரன், மருதுபாண்டியன் என்ற நபர்களை முன்கூட்டியே கல்லறை தோட்டத்துக்கு வரவழைத்தார் காளீஸ்வரி.. எதிர்பார்த்தபடியே, அப்பாவின் கல்லறைக்கு சிவக்குமார் வந்ததுமே, அவரை அனைவரும் சுற்றி வளைத்து, மொத்த சொத்தையும் காளீஸ்வரி பெயருக்கு எழுதித்தரும்படி கேட்டிருக்கிறார்கள்,. இதற்கு சிவக்குமார் மறுக்கவும், அங்கேயே அவரது கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். இவ்வளவும் போலீசார் விசாரணையில் காளீஸ்வரி வாக்குமூலமாக தந்துள்ளார்.
கொலை திட்டம்: ஆனால், விஷயம் என்னவென்றால், காளீஸ்வரியின் கள்ளக்காதலை கண்ணெதிரே பார்த்ததுமே, சிவக்குமார் மிகவும் நிலைகுலைந்து போய்விட்டாராம்.. பாரம்பரியமான குடும்பத்தில், கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தால், சமுதாயத்தில் கெட்ட பெயர் வந்துவிடும் என்று அஞ்சினாராம்.
அதனால், காளீஸ்வரியை எப்படியாவது கொலை செய்ய முடிவு செய்திருந்தாராம் சிவக்குமார்.. இதை தெரிந்து கொண்ட காளீஸ்வரி, முந்திக் கொண்டுப்போய் கணவரை போட்டு தள்ளிவிட்டாராம். ஆக மொத்தம், உல்லாச வாழ்க்கைக்கும், கணவரின் 50 கோடி சொத்துக்கும் ஆலாய் பறந்த பெண், இன்று ஜெயிலில் முடங்கிப்போய் உள்ளார். கூடா நட்பு எப்பவும் கேடாய்தானே முடியும்???
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications