டெண்டருக்கு லஞ்சம்.. ரூ.25 கோடிக்கு டீலிங் பேசினாங்க.. தவெக எம்எம்ஏ கருத்தால் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாக போகிறது. ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்து தவெக ஆட்சிக்கு வந்தது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதே கள எதார்த்தமாக உள்ளது. வேலியே பயிரை மேயும் கதையாக தவெக நிர்வாகிகளே அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் விருதுநகர் தவெக எம்எல்ஏ டெண்டருக்காக லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. என்னிடம் ரூ.25 கோடிக்கு டீலிங் பேசினார்கள் என்று செல்வமே கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார். லஞ்சம் வாங்க மாட்டோம். வாங்கியவர்களை விட மாட்டோம் என்றும் கூறினார். நேர்மையான நிர்வாகம் தொடர்பாக பல அறிவிப்புகள் வெளியாகின. அவை எல்லாமே அறிவிப்பாகவே உள்ளது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் நேரடியாக கேட்காவிடினும், மறைமுகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள்.

TVK Controversy

25 கோடிக்கு டீலிங்

மிரட்டல், கலெக்ஷன், டெண்டர் கமிஷன் விவகாரங்களில் அதிகம் சிக்கி வருகிறார்கள். விருதுநகர் தவெக எம்எல்ஏவாக இருப்பவர் செல்வம். இவர் ஏற்கனவே அடிதடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர். தேர்தல் நேரத்தில் தேமுதிக முன்னாள் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் குறித்த செல்வம் வைத்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் டெண்டர் விவகாரத்தில் செல்வம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.
":
இதுகுறித்து விருதுநகரில் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "உங்களுக்கு தெரியாதது இல்லை. என் மீதான புகாருக்கு உங்களுக்கே பதில் தெரியும். ஏதோ டெண்டருக்கு நான் ரூ.5 லட்சம் வாங்கிவிட்டேன் என்று கிளப்பி விடுகிறார்கள். நான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ரூ.25 கோடி கொடுப்பதாக சொன்னார்கள் என்றவரிடம் யார் சொன்னார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்வம், அழைப்பு வந்துச்சு. அவங்க சொன்னாங்க.

அசரடித்த விளக்கம்

ஆனால் எனக்கு இந்த சீட்டும், பதவியும் கொடுத்தது என்னுடைய அண்ணன் முதலமைச்சர் அவர்கள். ரூ.25 கோடி இல்லை.. ரூ.250 கோடி கொடுத்தாலும் என் அண்ணன் என்ன சொல்கிறாரோ அதுதான். இப்போது கூப்பிட்டு என் அண்ணன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொன்னால் உடனடியாக ராஜினாமா செய்வேன். அதனால் சும்மா சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறார்கள். நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. பணம் வாங்கவும் மாட்டேன்" என்று கூறினார். செல்வத்தின் கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+