நாட்டுல ரெண்டே ரெண்டு அறிவாளிகதான்.. இன்னும் 40 வருசத்துக்கு அவங்கதான்.. - ஒரே போடாக போட்ட ராதாரவி!
விருதுநகர் : நாட்டில் இரண்டே இரண்டு அறிவாளிகள் மட்டுமே, ஒருவர் பிரதமர் மோடி, மற்றொருவர் மத்திய அமைச்சர் அமித் ஷா என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் என பா.ஜ.கவைச் சேர்ந்த நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக பெரும் வளர்ச்சியைப் பெற்று வருகிறது என்றும் உலகம் முழுவதும் இருக்கும் அத்தனை தமிழர்களும் போற்றக்கூடிய ஒரு தமிழர் என்றால் அது அண்ணாமலை தான் என்றும் அவர் பேசியுள்ளார்.

பாஜக கூட்டம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க சார்பாக மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். திருச்சுழி தொகுதி பொறுப்பாளர் விஜயரகுநாதன், பொதுச் செயலாளர்கள் சீதாராமன், அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா வரவேற்றார்.

ராதாரவி
இந்தக் கூட்டத்தில் திரைப்பட நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான ராதாரவி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக பெரும் வளர்ச்சியைப் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் அத்தனை தமிழர்களும் போற்றக்கூடிய ஒரு தமிழர் என்றால் அது அண்ணாமலை தான். பாஜக மட்டும்தான் இன்று சுத்தமான ஒரே கட்சி. அப்படி இல்லையென்றால் திராவிடத்திலேயே இருந்த நான் இங்கு வருவேனா?

2 அறிவாளிகள் தான்
கறுப்பு பலூன் விட்டீர்கள், மோடியே திரும்பிப் போ என கோஷமிட்டீர்களே.. திரும்பி வந்தாரே வீரனாக. நாட்டில் இரண்டே இரண்டு அறிவாளிகள் மட்டுமே உள்ளனர். ஒருவர் பிரதமர் மோடி, மற்றொருவர் மத்திய அமைச்சர் அமித் ஷா. இந்தியாவில் இன்று பிரதமர் மோடி சொல்வதுதான் சட்டம். உலகமே அவர் சொல்வதை கேட்கிறது.

தமிழகத்தில் பாஜக ஆட்சி
கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜ.க அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு மத்திய பாஜக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும்.

அடுத்த 40 ஆண்டுகளுக்கு
எனக்குத் தெரிந்து இன்னும் 40 ஆண்டுகளுக்கு மத்தியில் பாஜக தான் ஆளும். என்ன 40 வருடங்கள் டெல்லியில் எனச் சொல்கிறேன் என நினைக்காதீர்கள். எனக்கு சுயநலம். நம்மால் அவ்வளவு காலம் தான் அதிகபட்சமாக இருக்க முடியும்" எனப் பேசினார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications