விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு: ஜாமீன் கோரிய திமுக நிர்வாகி... வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

Google Oneindia Tamil News

விருதுநகர்: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திமுக பிரமுகர் ஜுனைத் அகமதுவின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுகவை சேர்ந்த ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Virudhunagar gang rape accused Bail plea was postponed to April 26

பின்னர் இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி வசம் ஒப்படைத்ததை அடுத்து வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஹரிஹரன் உட்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரித்த சிபிசிஐடி அதிகாரிகள் ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த வாரம் இந்த 4 பேர் மீது மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டடார். இந்நிலையில் நால்வருக்கும் கடந்த 18 ஆம் தேதி நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், அவர்களுக்கு மே மாதம் 2 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம்! 234 தொகுதிகளிலும் ரூ.3 கோடியில் விளையாட்டு அரங்கங்கள்! சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம்! 234 தொகுதிகளிலும் ரூ.3 கோடியில் விளையாட்டு அரங்கங்கள்!

இதற்கிடையே திமுகவை சேர்ந்த ஜுனைத் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த 12 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த ஜாமின் மனு இன்று விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

English summary
Virudhunagar gang rape accused Bail plea was postponed to April 26: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திமுக பிரமுகர் ஜுனைத் அகமதுவின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X