நீச்சல் குளத்தில் தாய்க்கு வலிப்பு! டக்கென உள்ளே குதித்து காப்பாற்றிய குட்டி பையன்! நெகிழ்ச்சி வீடியோ
வாஷிங்டன்: அமெரிக்காவில் நீரில் மூழ்கிய தாயை துரிதமாகச் செயல்பட்டு 10 வயது சிறுவன் காப்பாற்றி உள்ளான்.
Recommended Video
நமக்குப் பிடித்தவர்களுக்கு எதாவது ஆபத்து என்றால் உடனே நமக்குக் கூடுதலாகவே எனர்ஜி வந்துவிடும். அதிலும் நமது குடும்பத்தில் யாராவதற்கு ஆபத்து என்றால் சொல்லவா வேண்டும்.
அப்படி ஆபத்தில் இருந்த தாயார் துரிதமாகச் செயல்பட்டு நொடிகளில் மகன் காப்பாற்றியுள்ளான். அவர் சுற்று தாமதித்து இருந்தாலும் பேராபத்து ஏற்பட்டு இருக்கும்.

நீரில் மூழ்கும் அபாயம்
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் பொதுவாக வீடுகளிலேயே சிறிய நீச்சல் குளங்களை வைத்து இருப்பார்கள். அப்படி வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல் குளத்தில் பெண் ஒருவர் ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது யாருமே எதிர்பார்க்காத விதமாக அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பெண் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.

குட்டி பையன்
தனது தாயார் நீச்சல் குளத்தில் மூழ்குவதைக் கண்டதும் நொடியும் தாமதிக்காத அந்த 10 வயது குட்டி பையன், உடனடியாக குளத்தில் குதித்து உள்ளான். மூழ்கிக் கொண்டு இருந்த தனது தாயாரைப் பிடித்துக் கொண்டே படிக்கட்டு இருக்கும் இடத்திற்கு வந்துள்ளான். அவனை பின் தொடர்ந்து அவர்கள் வீட்டின் செல்ல நாயும் வந்துவிட்டது. அந்த நாயும் மூழ்கும் பெண்ணை காக்க தன்னால் முடிந்த உதவியைச் செய்யக் காத்திருந்தது.

தக்க நேரத்தில்
அதற்குள் அந்த சிறுவனின் தாத்தா அங்கு வந்துவிடவே அவரின் உதவியுடன் தாயாரை வெளியே கூட்டி வந்துள்ளனர். இது அத்தனையும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை அந்த பெண்ணே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது 10 வயது மகன் தான் உயிரைக் காப்பாற்றியதாகவும் இல்லையென்றால் நிச்சயம் மரணித்து இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராட்டு
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் அனைவராலும் அந்த சிறுவன் தாயாரைக் காக்க எந்தளவு முனைப்புக் காட்டுகிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. துரிதமாகச் செயல்பட்டு தாயாரைத் தக்க நேரத்தில் காப்பாற்றிய அந்த சிறுவனை நெட்டிசன்கள் பாராட்டித் தள்ளி வருகின்றனர்,

என்ன நடந்தது
அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வலிப்பு ஏற்பட்டதால் அந்த பெண் தண்ணீரில் தத்தளித்து உள்ளார். அருகே நின்று இருந்த அந்த சிறுவனுக்குத் தண்ணீரில் வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதைக் கேட்டு நீச்சல் குளத்தில் பார்த்த போது தான், தாயார் குளத்தில் மூழ்குவதைப் பார்த்துள்ளான். இதையடுத்து நொடியும் தாமதிக்காமல் தாயாரை அவன் காப்பாற்றியுள்ளான்












Click it and Unblock the Notifications