வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா நாடாளுமன்ற வன்முறை: டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்கும் முயற்சி தொடங்கியது

அமெரிக்க நாடாளுமன் சபாநாயகர் நான்சி பெலோசி, அதிபர் டொனல்ட் டிரம்ப்பைப் பதவியிலிருந்து நீக்கும் முயற்சிகளை விரைவுபடுத்தப்போவதாகக் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டிரம்ப் ஜனநாயத்திற்கு பெரும் அச்சுறுத்தல் என கூறி, அமெரிக்க நாடாளுமன்ற நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோசி அவர் விரைவில் பதிவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கூறிய நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றிலேயே அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கானோர் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்க தற்போதைய அதிபர் டிரம்ப் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்தார் டிரம்ப். அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.

A historic percentage of Americans want Trump removed from office

டிரம்ப்பின் பேச்சுக்கள், கருத்துக்கள் அவரது ஆதரவாளர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. இதனையடுத்து கடந்த வாரம் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடல் ஹில் கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் காயமடைந்த பெண்ணும், காவலரும் மரணமடைந்தனர். 5 பேர் மரணத்திற்கு காரணமாக அமைந்து விட்டது அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறை வெறியாட்டம்.

உலக அரங்கில் அதிபர் ட்ரம்புக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம். 6 மணி நேர பதற்றமான சம்பவத்திற்கு இடையே ஜோ பிடன் வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து நாடாளுமன்றத்தில் சான்றிதழ் அளித்தனர். ஜனவரி 20ஆம் தேதி அன்று அவர் பதவியேற்க உள்ளார். இதனையடுத்து டிரம்பின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது.

கேபிடல் ஹில் பகுதியில் கலவரம் ஏற்படக்காரணமான டிரம்ப், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 25 ஆம் திருத்தத்தின் கீழ், டிரம்ப் அதிபராக நீடிக்கத் தகுதியற்றவர் என்ற தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என சபாநாயகர் பெலோசி கூறினார்.

இதற்கு துணை அதிபர் மைக் பென்ஸ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், டிரம்ப்பைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளார் பெலோசி.

டிரம்ப் அதிபராகத் தொடர்வது, அரசமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல். அவை இரண்டையும் பாதுகாக்க, டிரம்ப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பெலோசி வலியுறுத்தியுள்ளார்.

ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்று சத்தியபிரமாணம் எடுத்துக்கொள்வார். அதற்கு முன்பாகவே டிரம்ம்பின் பதவிக் காலம் இன்னும் சில நாட்களில், முடிவைந்து விடும். டிரம்ப் ஜனநாயத்திற்கு பெரும் அச்சுறுத்தல் என கூறி, அமெரிக்க நாடாளுமன்ற நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, அவர் விரைவில் பதிவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

அமெரிக்கா: சிகாகோவில் தொடர் துப்பாக்கிச் சூடு- 4 பேர் பலி அமெரிக்கா: சிகாகோவில் தொடர் துப்பாக்கிச் சூடு- 4 பேர் பலி

வன்முறையை தூண்டும் வித‌த்தில் கருத்துகளை வெளியிட்டதால் அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியுள்ளது. இந்நிலையில், தனது மவுனத்தை கலைத்த மெலினியா டிரம்ப் அமெரிக்காவில் நடந்த வன்முறை சம்பவம் தனது மனதை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட அவர், நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். இதை தொடர்ந்து, தன் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மிகவும் இழிவாக பேசப்பட்டதாகவும் கூறினார். இந்த சம்பவத்தை சொந்த லாபத்திற்காக யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கானோர் வலியுறுத்தியுள்ளனர். 40 சதவிகிதம் பேர் டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். டிரம்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் செவ்வாய்கிழமையன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The potential removal of President Donald Trump from office starts out more popular than any other removal process of a president in recent American history. Removing Trump from office remains quite unpopular among Republicans, however.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X