அட பாவமே! அன்று ஆப்கன் அமைச்சர்.. இன்று இரவு பகல் பார்க்காமல் டாக்ஸி ஓட்டும் டிரைவர்! யார் தெரிகிறதா
வாஷிங்டன்: ஆப்கன் நாட்டில் ஒரு காலத்தில் அமைச்சராக இருந்தவர், இப்போது அமெரிக்காவில் தினசரி உணவுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கன் நாட்டில் சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்க ஆதரவுடன் கூடிய ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கனில் இருந்த அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக வெளியேறியது.
அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதுமே, தாலிபான்கள் மீண்டும் ஆப்கன் நாட்டை கைப்பற்றத் தொடங்கினர். வெறும் சில நாட்களில் ஒட்டுமொத்த ஆப்கனையும் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர்.
ஆப்கன் உள்துறை அமைச்சர் படம் முதல்முறையாக வெளியீடு... பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்

கால் டேக்ஸி ஓட்டுநர்
இதன் காரணமாக முந்தைய அஸ்ரப் கானி அரசில் இருந்த பலரும் ஆப்கன் நாட்டில் இருந்து வெளியேறி விட்டனர். இந்நிலையில் ஆப்கான் முன்னாள் நிதியமைச்சராக இருந்த காலித் பயெண்டா என்பவர் தற்போது வாஷிங்டனில் கால் டேக்ஸி ஓட்டுநராக பணிபுரியும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தாலிபான்கள் ஆப்கான் தலைநகர் காபூலை கைப்பற்றுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் காலித் பயெண்டா அவருடைய பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

150 டாலர்
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு காலத்தில் நிதியமைச்சராக இருந்தவர் இந்த காலித் பயெண்டா, அமைச்சராக இருந்த போது, அவர் 6 பில்லியன் டாலருக்கு பட்ஜெட் சமர்ப்பித்திருந்தார். ஆனால் இப்போது வெறும் 150 டாலர் வருமானத்திற்காக இரவு பகல் பார்க்காமல் கால் டேக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவுக்கு வந்த பிறகு தான், குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க முடிவதாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் அமெரிக்காவில் தங்க முறையான வீடு கூட இல்லை என்றும் இது போன்ற வேலைகளைச் செய்தே தனது குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் காலித் தெரிவித்தார்.

வேதனை
ஆப்கன் முன்னாள் நிதியமைச்சராக இருந்த காலித் பயேண்டாவுக்கு தனது குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்ள இந்த வேலை மட்டும் போதவில்லை. இதனால் அவர் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் வால்ஷ் ஸ்கூல் ஆஃப் ஃபாரின் சர்வீஸில் துணைப் பேராசிரியராகவும் பகுதி நேரத்தில் பணியாற்றி வருகிறார். ஆப்கனில் இப்போது நடக்கும் சம்பவங்கள் மிகுந்த வேதனையைத் தருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆப்கானை மீண்டும் கட்டமைப்பதில் தோல்வி அடைந்துவிட்டதாகவும் தான் தோல்வியின் ஒரு அங்கமாக இருந்தது வேதனையாக உள்ளதாகவும் காலித் தெரிவித்தார்.

தேவையானதை செய்யவில்லை
இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கனை மீண்டும் கட்டமைக்க உதவுவோம் என அளித்த வாக்குறுதியை அமெரிக்கா நிறைவேற்றவில்லை. அமெரிக்காவின் நோக்கங்கள் நல்லதாக இருந்து இருந்து இருக்கலாம் என்றும் இருப்பினும் ஆப்கனில் முடிந்த விதம் அமெரிக்காவுக்கு நிச்சயம் ஏமாற்றத்தையே அளித்து இருக்கும். நாங்கள் நகர்ப்புறங்களில் ஆப்கனை வளர்த்தெடுத்தோம் என்று குறிப்பிட்ட அவர், அது விரைவாகத் தாலிபான்களிடம் விழுந்துவிட்டது என்றும் கிராமப்புறங்களில் தேவையான நடவடிக்கையை எடுக்கத் தவறிவிட்டது உண்மை தான் என்றும் தெரிவித்துள்ளார்.