Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

11 நாட்கள் நான்ஸ்டாப் டிராவல்.. 13,510 கி.மீ. தூரம்.. புதிய கின்னஸ் ரெக்கார்டு வைத்த பறவை!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகில் நீண்ட தூரம் பறந்து காட்விட் பறவை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இடைவெளியில் எங்கும் நிற்காமல் தொடர்ந்து 8,453 மைல்கள் அதாவது 13,560 - கிலோ மீட்டர் தூரம் இந்த பறவை பறந்துள்ளது.

இயற்கையின் அதிசய படைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுவது பறவைகள்.. நூற்றுக்கணக்கான பறவை இனங்கள் உள்ளன. பறவைகள் இரைதேடியும் இனப்பெருக்கத்திற்காகவும் தனது வாழ்விடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு புலம் பெயர்ந்து செல்கின்றன.

இப்படி பறவைகள் புலம் பெயர்ந்து செல்வதை வலசை செல்லுதல் என்று சொல்வதுண்டு. பறவைகள் கண்டம் விட்டு கண்டம் என பல ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு பறந்து செல்வது இயற்கையின் வினோதம் என்றே சொல்லலாம்.

ரஷ்ய நீர் வாத்து

ரஷ்ய நீர் வாத்து

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களிலுள்ள நாடுகளிலிருந்து சீரான தட்ப வெப்பநிலைக்காக தமிழகத்தின் செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகை, வேதாரண்யம், கடலூர், தனுஷ்கோடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பிளமிங்கோ, ரஷ்ய நீர்வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளன், அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, நீர் காகங்கள் உள்ளிட்ட பறவைகளும் ஆண்டு தோறும் வலசை வருவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

13,560 - கி.மீட்டர் தூரம்

13,560 - கி.மீட்டர் தூரம்

இதேபோலத்தான் வலசை சென்ற ஒரு பறவை தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மிக நீண்ட தூரம் பறந்து சென்ற பறவை என்ற சாதனையை பர் டெயில் காட்விட் என்று அழைக்கப்படும் "லிமோசா லப்போனிகா" என்ற பறவை படைத்துள்ளது. இந்த பறவை அலாஸ்காவில் இருந்து தாஸ்மானியா (ஆஸ்திரேலியாவில் உள்ள மாகாணம்) வந்துள்ளது. 11 நாட்கள் பயணமாக எங்குமே நிற்காமல் 8,453 மைல்கள் அதாவது 13,560 - கி.மீட்டர் தூரம் பறந்துள்ளது. உனவுக்காக கூட இந்த பறவை எங்குமே நிற்கவில்லை.

11 நாட்களாக தொடர்ந்து பறந்துள்ளது

11 நாட்களாக தொடர்ந்து பறந்துள்ளது

பறவை வலசை செல்லுதலை கண்காணிக்க அதன் கழுத்தில் கட்டப்பட்ட செயற்கைகோள் டேக் மூலமாக கண்காணிக்கப்பட்டதில் பறவையின் மொத்த பயண தூரமும் அளவிடப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து நியூயார்க் வரை கணக்கிட்டால் இரண்டு அரை முறை சென்று வருவதற்கு ஈடான பயணம் ஆகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய லிமோசா லப்போனிகா என்ற அந்த பறவை 11 நாட்களாக தொடர்ந்து பயணித்துள்ளது. ஒரு இடத்தில் கூட எங்கும் தரயிறங்காமல் தாஸ்மானியா சென்றடைந்துள்ளது.

உடல் எடையில் பாதியை இழந்துவிட்டது

உடல் எடையில் பாதியை இழந்துவிட்டது

இதற்கு முன்பாக காட்விட் பறவை 217 மைல்கள் தூரம் பறந்து சென்று வைத்திருந்த சாதனையை 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இனத்தை சேர்ந்த மற்றொரு பறவை முறியடித்துள்ளது. இரவு பகலாக 11 நாட்கள் பயணித்த காட்விட் பறவை தனது உடல் எடையில் பாதியை இழந்துவிட்டதாக பறவைகளின் வாழ்வியல் குறித்து ஆய்வு செய்யும் எரிக் வோஹ்லர் என்பவர் தெரிவித்துள்ளார்.

நீரில் இறங்கினால் இறந்துவிடும்

நீரில் இறங்கினால் இறந்துவிடும்

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "காட்விட் பறவைகளை பொறுத்தவரை வலசை செல்லும் போது நீரில் இறங்கினால் அது இறந்துவிடும். மீண்டும் பறந்து செல்வதற்கான அமைப்பு அதன் கால்களில் இல்லை. எனவே, சோர்வு அடைந்து கடல் பரப்பிலோ அல்லது மோசமான தட்பவெப்ப நிலையால் தரையிறங்கினால் அதுவே அதோடு வாழ்க்கை முடிந்துவிடும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+