ஸ்பேஸ் சுற்றுலா.. "ப்ளூ ஆர்ஜின்" சாதனை.. வெற்றிகரமாக விண்ணுக்கு சென்று திரும்பியது ஜெப் பெசோஸ் குழு!
நியூயார்க்: ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஜெப் பெஸோஸ் அடங்கிய ப்ளூ ஆர்ஜின் குழு வெற்றிகரமாக விண்ணுக்கு சென்று பாதுகாப்பாக திரும்பி வந்துள்ளது. ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் குழு ஸ்பேஸுக்கு சென்று வந்த நிலையில் தற்போது ப்ளூ ஆர்ஜின் ஜெப் பெஸோஸ் குழுவும் இதே சாதனையை படைத்துள்ளது.
Recommended Video
முதலில் சிறிய ஆன்லைன் புக் விற்பனை நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அமேசான் இன்று மிகப் பெரிய ஆன்லைன் சாம்ராஜ்ஜியத்தையே கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இன்று தனது முதல் தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
விண்வெளி குறித்தும், மற்ற கிரகங்கள் குறித்தும் நடக்கும் ஆய்வுகள் கடந்த நூற்றாண்டில் நடுப்பகுதியில் இருந்தே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இதில் பெரிய போட்டியே நிலவியது. ஆனால், இது 21ஆம் நூற்றாண்டு. இப்போது விண்வெளி பயணங்களில் உலக நாடுகளைக் காட்டிலும் தனியார் நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கின.

ஸ்பேஸ் சுற்றுலா
மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா போல அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன. குறிப்பாக ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த வாரம்தான் யூனிட்டி 22 விண்கலம் மூலம் ரிச்சர்ட் பிரான்சன் ஸ்பேஸுக்கு சென்றிருந்தார்.

மொத்தம் நான்கு பேர்
இந்நிலையில், இன்று ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கேட் மூலம் ஜெஃப் பெசோஸ் ஸ்பேஸ் சுற்றுலாமேற்கொண்டார். ஜெஃப் பெசோஸுடன் அவரது சகோதரர், 82 வயதான பைலட் வாலி ஃபங்க் மற்றும் 18 வயது இளைஞர் ஒருவர் விண்வெளிக்கு சென்று திரும்பினர். ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் இந்த முதல் ராக்கெட்டில் மொத்தம் நான்கு பேர் பயணிக்கின்றனர்.

ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்
இந்த ராக்கெட் பூமியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு பேரையும் அழைத்துச் சென்றது. அதன்பின் புவிஈர்ப்பு குறைவாக இருக்கும் 100 கிமீ தாண்டிய பகுதியில் இந்த ராக்கெட்டின் கேப்ஸ்யூல் சில நிமிடங்கள் மிதந்துவிட்டு பின் பூமியை நோக்கி திரும்பியது. மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இவர்களின் விண்வெளி பயணம் மேற்கொள்ளப்பட்டது.

ராக்கெட் நேரம்
புதிய ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் (New Shepard) இவர்கள் விண்வெளிக்குச்சென்றனர். கேப்ஸ்யூலை விண்ணுக்கு அனுப்பிய பின் இந்த ராக்கெட்டும் பாதுகாப்பாக திரும்பி வந்தது. அதன்பின் 6 நிமிடங்கள் கழித்து குழு இருந்த கேப்ஸ்யூலும் பூமிக்கு திரும்பி வந்தது. இந்தப் பயணம் 10 நிமிடங்கள் வரை நீடித்தது. இதில் 4 நிமிடங்கள் குழு புவி ஈர்ப்பு விசை இன்றி மிதந்தனர். தனது பல ஆண்டு ஸ்பேஸ் கனவு முதல்முறையாக ஜெஃப் பெசோஸ் இந்த பயணம் மூலம் இன்று நிறைவேறினார்.

ராக்கெட் பெயர்
1961 ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கரான ஆலன் ஷெப்பர்டின் நினைவாக இந்த ராக்கெட்டிற்கு New Shepard எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தானாக இயங்கும் ஒரு ராக்கெட்(autonomous aircraft), அதாவது இதை இயக்க தனியாக ஒரு பைலட் தேவையில்லை. இதன் மூலம் விண்வெளி வீரர்களாக இல்லாமல் சாதாரண நபர்களுடன் ஆட்டோமெடிக் ராக்கெட் மூலம் விண்ணுக்குச் செல்லும் முதல் ராக்கெட் என்ற பெயரை நியூ ஷெப்பர்டின் பெற்றுள்ளது.

ஆட்டோமெடிக் ராக்கெட்
அதாவது டெக்சாஸிலிருந்து இந்த ராக்கெட் புறப்படும்போது இதை வழிநடத்த எந்தவொரு பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் உள்ளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி விண்வெளிக்குச் செல்லும் அதிக வயதான நபர், மிகக் குறைந்த நபர் ஆகியோரும் இதில் தான் இடம்பெற்றுள்ளனர்.

எப்படி பார்க்கலாம்
அந்த 18 வயது இளைஞர் 28 மில்லியன் டாலர் கொடுத்து இந்த ஸ்பேஸ் பயணத்தை மேற்கொண்டார். 10 நிமிட ஸ்பேஸ் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு டெக்ஸாஸ் பகுதியில் இந்த கேப்ஸ்யூல் பாதுகாப்பாக குழுவுடன் தரையிறங்கியது. ரிச்சர்ட் பிரான்சனை தொடர்ந்து தற்போது ஜெப் பெஸோசும் வெற்றிகரமாக ஸ்பேஸ் பயணம் மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications