வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாரும் இந்த பக்கம் வந்துராதீங்க.. எல்லையில் போலீஸ் காவல்.. டிரம்ப் பாணியில் அதிரடி காட்டும் பைடன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்; அமெரிக்காவில் அகதிகளின் எண்ணிக்கை திடீரென்று பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் எல்லைகளை மூடுவதாக பைடன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

போர் நடைபெறும் நாடுகள், கடும் வறட்சி நிலவும் மாநிலங்கள் ஆகிய பல்வேறு நாடுகளிலும் இருந்தும் அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாகச் செல்வது வழக்கம். அவர்களுக்கு சில குறிப்பிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை அளிக்கப்படும்.

என்னாச்சு? திமுகவில் 3 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டும்தானா? அப்ப எதிர்காலத்தில்? என்னாச்சு? திமுகவில் 3 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டும்தானா? அப்ப எதிர்காலத்தில்?

இருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகளாக டிரம்ப் அரசு அகதிகளுக்கு எதிராகக் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றியது. அமெரிக்காவில் அகதிகள் நுழைவதைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அகதிகள் அதிகரிப்பு

அகதிகள் அதிகரிப்பு

இந்நிலையில், ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், அகதிகள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் அமெரிக்காவில் அகதிகளுக்குக் குடியுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்கா எல்லைகளில் அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாகப் பல மடங்கு அதிகரித்தது.

யாரும் வர வேண்டாம்

யாரும் வர வேண்டாம்

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்கா அரசு, அகதிகளைக் கையாள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டது. இது குறித்து அமெரிக்கா உள் துறை செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ், "இது சரியான நேரம் இல்லை. பயணம் மிகவும் ஆபத்தானது என்பதால் இப்போது இங்கு யாரும் வராதீர்கள். அனைவரையும் பாதுகாப்பான வழியில் தங்க வைக்க சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எனவே, இப்போது யாரும் இங்கு வராதீர்கள்" என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

கொஞ்சம் டைம் வேண்டும்

கொஞ்சம் டைம் வேண்டும்

கடந்த காலங்களில் அகதிகளை முறையாக நிர்வகிக்க அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட திட்டத்தைப் பின்பற்றி வந்தது என்றும் டிரம்ப் நிர்வாகம் அந்த முழு திட்டத்தையும் நாசமாக்கிவிட்டதால் இப்போது சிக்கல் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அகதிகள் பிரச்னையை சரி செய்ய பைடன் அரசுக்குத் திட்டம் இருப்பதாகவும் ஆனால் அதை நடைமுறைப்படுத்த சிறிது காலம் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டிரம்ப் பாணியில் பைடன்

டிரம்ப் பாணியில் பைடன்

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய அமெரிக்க அதிபர் பைடனும் அகதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தார். டிரம்ப் காலத்தில் பின்பற்றிவந்த சில கடுமையாக நடவடிக்கைகள் தொடரும் என்று அறிவித்தார். மேலும், எல்லைகளில் அகதிகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இருப்பினும், பைடன் அரசின் இந்தச் செயலை குடியரசு கட்சியினர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர். பைடனின் நிர்வாக தோல்வியையே இது காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், நிலைமையைக் கட்டுப்படுத்த பைடன் அரசு திட்டம் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் அதுபோன்ற எந்தவொரு திட்டத்தையும் காண முடியவில்லை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

English summary
US closes its Border Amid Mounting Migrant Crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X