பிரிக்ஸ் வைத்த வெடி.. மளமளவென சரிந்த அமெரிக்க டாலரின் மதிப்பு! டிரம்புக்கு இது தேவைதான்
வாஷிங்டன்: வரி விஷயத்தில் இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு அமெரிக்கா கிலியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் நடவடிக்கையால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இது டிரம்புக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் முதுகெலும்பாக டாலரே இருக்கிறது. இந்த டாலரை உலகம் முழுவதும் பொதுவான நாணயமாக மாற்ற அமெரிக்க தொடர்ந்து முயற்சிக்கிறது. இதைத்தான் பிரிக்ஸ் நாடுகள் எதிர்த்து களமாடியுள்ளன.

கையிருப்பு பல்வகைப்படுத்தல்
ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட அளவுக்கு வெளிநாட்டு கரன்சியை கையிருப்பு வைத்திருக்கும். உதாரணமாக இந்தியா அதிக அளவில் அமெரிக்காவின் கரன்சியான டாலரை கையிருப்பு வைத்திருக்கிறது. டாலரை வைத்துதான் அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடியும். ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் செய்யவும் டாலர் தேவை. எனவே டாலரை வைத்திருக்கிறோம். இதை அந்நிய செலாவணி கையிருப்பு என்று சொல்லுவார்கள். ஆனால் சமீப காலமாக இந்த டாலர் கையிருப்பை பிரிக்ஸ் நாடுகள் குறைக்க தொடங்கியுள்ளன.
பிரிக்ஸ் நாடுகள்
அமெரிக்க டாலருக்க பதிலாக யூரோ, ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்ட் போன்ற சர்வதேச கரன்சியையும், தங்கள் சொந்த நாட்டு கரன்சியையும் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதைத்தான் 'கையிருப்பு பல்வகைப்படுத்தல்' (Reserve Diversification) சொல்கிறார்கள். பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்த வேலையை செய்ய தொடங்கியிருக்கின்றன. எனவே அமெரிக்கா கலக்கமடைந்திருக்கிறது. ஏனெனில், பதுக்கும் பொருளுக்கு தான் டிமாண்ட் இருக்கும்.
பிரிக்ஸ் நாடுகள் தங்கள் வசம் உள்ள டாலர்களை தாராளமாக வெளியில் எடுத்து செலவு செய்ய தொடங்கியதால், டாலர் எளியதாக கிடைக்கும் ஒரு கரன்சியாக மாறியிருக்கிறது. எளிதில் கிடைக்கிறது எனில் அதன் மதிப்பு இயல்பாகவே சரியும். அப்படித்தான் டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் குறைய தொடங்கியிருக்கிறது. DXY குறியீட்டில் டாலர் 98வது இடத்திற்கு சரிந்திருக்கிறது.
டாலர் மதிப்பு சரிவு
உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் முக்கியப் பங்குதாரர்களாக உள்ள ஆறு நாணயங்களை கொண்டிருக்கிறது.
1. யூரோ (EUR): குறியீட்டில் மிகப்பெரிய பங்கு (57.6%) கொண்டது.
2. ஜப்பானிய யென் (JPY): (13.6%)
3. பிரிட்டிஷ் பவுண்ட் (GBP): (11.9%)
4. கனடிய டாலர் (CAD): (9.1%)
5. ஸ்வீடிஷ் க்ரோனா (SEK): (4.2%)
6. ஸ்விஸ் பிராங்க் (CHF): (3.6%)
இந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 100. இதைவிட டாலரின் மதிப்பு அதிகமாக இருக்கிறது எனில், டாலர் வலுவாக இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் இப்போது டாலரின் மதிப்பு 98ஆக சரிந்திருக்கிறது. எனவேதான் டாலர் பலவீனமடைந்திருக்கிறது. இதற்கு முதன்மை காரணம் பிரிக்ஸ் நாடுகள்தான்.
வட்டி விகிதங்கள்
இரண்டாவது காரணம் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்புதான். எந்த ஒரு நாட்டிலும் மத்திய வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும்போது முதலீடுகளும் அதிகரிக்கும். ஏனெனில் இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்கிறது எனில், பிற நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் கரன்சியை டாலராக மாற்றி பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். ஆனால், வட்டி குறைக்கப்படும்பொது இந்த முதலீடும் குறையும். எனவே இயல்பாக டாலரின் மதிப்பும் சரியும்.
-
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்












Click it and Unblock the Notifications