Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்கிரமாகும் உக்ரைன் விவகாரம்.. ரஷ்யாவுடன் கைகோர்த்துவிட்டது சீனா! சிக்கல்.. எச்சரிக்கும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யா- உக்ரைன் விவகாரத்தில், சீனா ரஷ்யாவுக்கு மறைமுகமாக உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

Recommended Video

    China சிக்கலை உருவாக்கும்! America எச்சரிக்கை | Ukraine Issue | Oneindia Tamil

    ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே அதிகரித்து வரும் போர்ச்சூழலால், இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளன. இது நாளுக்கு நாள் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. அதன்பிறகு உக்ரைன், ரஷ்யப் படைகளை பின்வாங்கச் சொன்னது. ஆனால், ரஷ்யா பின்வாங்குவதாக இல்லை.

    வெளியேறுங்கள்

    வெளியேறுங்கள்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சில நாட்களுக்கு முன், உக்ரைனில் இருக்கும் அமெரிக்க மக்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும், உக்ரைனில் வசிக்கின்ற தங்கள் நாட்டு மக்களை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறிவருகின்றன. இதையடுத்து உக்ரைனில் இருக்கும் தூதரகங்களும் மூடப்பட்டு வருகின்றன.

     போலந்து

    போலந்து

    ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அகதிகளாக்கப்படும் மக்களை ஏற்பதற்கான முன்னேற்பாடுகளை போலந்து அரசு செய்துவருகிறது. அதேபோல, அமெரிக்காவும் தனது படை வீரர்கள் மூலம் அகதிகளுக்காக போலாந்து அரசுக்கு உதவ உள்ளதாக பென்டகனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

    ஆக்கிரமிப்பு

    ஆக்கிரமிப்பு

    ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் உக்ரைனை ஆக்கிரமிப்பதா இல்லையா என்ற முடிவை அவர் எடுக்கவில்லை, எடுத்ததாகவும் தெரியவில்லை என்று அமெரிக்கா கூறியது. அதேநேரம், எந்த எச்சரிக்கையும் செய்யாமல் ரஷ்யா முன்னேறி தாக்குதல் நடத்தவும் முடியும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிகாரிகள் ஐரோப்பா செல்கிறார்கள்.

    சீனா

    சீனா

    இந்நிலையில், சீனா ரஷ்யாவுக்கு உதவுவதாக அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது. பென்டகன் தலைவர் ஆஸ்டின் இதுகுறித்து கூறுகையில், ''சீனா மறைமுக ஆதரவை ரஷ்யாவுக்கு வழங்குகிறது. சீனா உதவினால் அது மிகப்பெரிய‌ ஆபத்தாக முடியும். இது ஐரோப்பாவின் பாதுகாப்பு நிலைமையை கேள்விக்குறியாக்கி சீர்குலைக்கும்'' என்று தெரிவித்தார்.

    அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை

    அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை

    உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தால் சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. தள்ளாட்டம் கண்டுள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளிலும் அதன் தாக்கம் தெரிந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ந்நிலையில் உக்ரைன் சர்ச்சை மேலும் வலுக்கும்போது, மூன்றாவது காலாண்டில் இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் நிலவரம், ஒரு பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலர் என்றளவில் கூட அதிகரிக்கக் கூடும் என்றும் ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. இது 7 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சா எண்ணெயில் அதிக பட்ச விலை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கச்சா எண்ணெய் அதிகரிக்கும் பட்சத்தில், விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் வாய்ப்புள்ளது.

    குவாட் மாநாடு

    குவாட் மாநாடு

    நிலம் தொடர்பான அரசியல் குறித்து விவாதிக்கும் அமைப்பு ‛குவாட்' ஆகும். இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பிற நாடுகளின் ஆக்கிரமிப்பு, அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என சமீபத்தில் நடந்த குவாட் அமைப்பின் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இந்த மாநாட்டில், இந்திய -சீனா எல்லைப் பிரச்சனை குறித்து இந்திய‌ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இதையடுத்து, குவாட் அமைப்புக்கு எதிராக சீனா அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதில், சர்வதேச அளவில் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ‛குவாட்' அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாடுகளுக்கு இடையே மோதலை தூண்டிவிடுவது தான் இதன் நோக்கம். குவாட் அமைப்பின் இந்த நோக்கம் தோல்வி அடையும் என சீனா தெரிவித்தது.

    இந்தியா -ரஷ்யா

    இந்தியா -ரஷ்யா

    இந்தியா- ரஷ்யா இடையே எப்போதும் சுமூகமான உறவுதான் இருக்கும். இந்நிலையில், சீனாவுடன் சமீபகாலங்களில் இந்தியாவுக்கு மனக்கசப்பு அதிகரித்து வருகிறது. தெற்கு லே ஏரியில் சீன ஆக்கிரமிப்பு, அருணாச்சலில் ஊடுருவல் என சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை போர் சூழலாக உருவாகலாம் என்ற நிலையில், இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவுக்கு, சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+