வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏற்க முடியாத வரி... காலையிலேயே மோடியை போனில் கூப்பிட்டு குமுறிய ட்ரம்ப்

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்கா வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்- வீடியோ

    வாஷிங்டன்: அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை திரும்பப் பெறுமாறு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் அழைத்து வலியுறுத்தியுள்ளார். இந்த வரி விதிப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஜூன் 1 ம் தேதி இந்தியாவுக்கான வர்த்தக சலுகைகளை அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவந்தது. இதன்பிறகு, இந்த மாத தொடக்கத்தில், 28 அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரிகளை உயர்த்துவதாக இந்தியா அறிவித்தது. பாதாம், ஆப்பிள், பருப்பு வகைகள் மற்றும் வால்நட் ஆகியவை, சுங்க வரிகளை உயர்த்திய பொருட்களில் அடங்கும்.

    Donald Trump calls on PM Modi to withdraw tariffs

    இந்த நிலையில் டெல்லியில் நேற்று, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசித்துள்ளார்.

    இதையடுத்து, ஜி 20 உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை ஜப்பானை சென்று அடைந்தார், அங்கு அவர் டிரம்ப் உட்பட உலக நாடுகளின் பல தலைவர்களுடன் பல முக்கிய சந்திப்புகளில் கலந்து கொள்கிறார்.

    எனவே, இந்த சந்திப்புக்கு முன்பாகவே, அவசரமாக மோடிக்கு போன் போட்டு வரிகளை குறைக்கச் சொல்லியுள்ளார் ட்ரம்ப்.

    மேலும் ட்ரம்ப் இன்று ஒரு ட்வீட்டும் இதுதொடர்பாக வெளியிட்டுள்ளார். அதில், "இந்தியா பல வருடங்களாக, அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு செய்து வருகிறது. சமீபத்தில் இந்த வரி விதிப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, பிரதமர் மோடியுடன், ஆலோசிக்க ஆர்வமாக உள்ளேன். இது ஏற்கமுடியாத வரி உயர்வு. இது திரும்பப் பெறப்பட வேண்டும். இவ்வாறு ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

    English summary
    I look forward to speaking with Prime Minister Modi about the fact that India, for years having put very high Tariffs against the United States, just recently increased the Tariffs even further. This is unacceptable and the Tariffs must be withdrawn, says US President Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X