Donald Trump: நான் மட்டும் போட்டியிருந்தால் நடக்கிறதே வேற.. தேர்தல் ரிசல்ட்டை பார்த்து கடுப்பான டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 பிரதிநிதி சபை இடங்களுக்கும், 100 செனட் சபை இடங்களுக்கும் நடந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது. தேர்தல் ரிசல்டை பார்த்து கடுப்பான டிரம்ப், நான் மட்டும் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருப்போம் என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நேற்று நடைபெற்றது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 பிரதிநிதிகள் அவை இடங்களுக்கும், 100 செனட் இடங்களுக்கும், 36 மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் தேர்ந்தெடுக்கவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

Donald Trump frustrated by the US election results says I Was On Ballot would have won

இதில் அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி 224 இடங்களில் வென்றுள்ளது. டிரம்பின் கட்சி 129 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. செனட் சபையில் 53 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி 42 இடங்களில் வென்றுள்ளது.

இந்த தேர்தல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் அவர் எடுத்த நடவடிக்கைகளுக்காக மக்கள் கொடுத்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் கொள்கைகளால் அமெரிக்காவிலும் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டது. இதனால், இடைத்தேர்தலில் மக்கள் டிரம்பிற்கு பெரிய ஆப்பாக வைத்து இருக்கிறார்கள்.

தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஒருவேளை நான் இருந்து இருந்தால் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருப்போம்" என்று கூறியுள்ளார். அதேபோல டிரம்ப் வெளியிட்ட மற்றொரு பதிவில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தன்னால் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். வீட்டோ என்று எழுதப்பட்டு இருக்கும் தொப்பி ஒன்றையும் எனது ட்ரூத் வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் இதற்கு முந்தைய ஆட்சி காலத்தின் போது 2020 அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்தது போல இப்போதும் செயல்படுவாரா? என்ற யூகம் கிளம்பிய நிலையில் அதனை மறுத்த டிரம்ப், தேர்தல் முடிவுகளை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஜனநாயக கட்சியினருடன் நாங்கள் பணியாற்றுவோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். நிச்சயமாக, ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வருவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+