வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா போறீங்களா? கவனமாக இருங்க.. சொந்த நாட்டு மக்களை சட்டென எச்சரித்த அமெரிக்கா.. பரபர பின்னணி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாதம், குற்றச்செயல்களை சுட்டிக்காட்டி அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என சொந்த நாட்டு மக்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்கு ஆண்டுதோறும் அமெரிக்காவில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக சுற்றுலா, தொழில் உள்ளிட்டகா ரணங்களுக்காக அவர்கள் இந்தியாவுக்கு வருகின்றனர்.

இவ்வாறு வரும் அமெரிக்க நாட்டு மக்களுக்கு அந்நாடு பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கும். மேலும் ஆண்டுதோறும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு நாட்டின் சூழல் பற்றி அறிவிப்புகள் பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிடப்படும்.

பேனா சின்னம்! ஆடு பகை குட்டி உறவா? கனிமொழிக்கு பதவி கொடுத்த பாஜக! அர்ஜுன் சம்பத்துக்கு வந்ததே கோபம்! பேனா சின்னம்! ஆடு பகை குட்டி உறவா? கனிமொழிக்கு பதவி கொடுத்த பாஜக! அர்ஜுன் சம்பத்துக்கு வந்ததே கோபம்!

2ம் நிலையில் இந்தியா

2ம் நிலையில் இந்தியா

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அறிவிப்பை அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் இந்தியா பற்றிய சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி பாதுகாப்பு அம்சங்கள் அடிப்படையிலான நாடுகள் பிரிவில் 2ம் நிலையில் இந்தியா உள்ளது. அதோடு இந்தியாவில் பயங்கரவாதம், குற்றச்செயல்கள் அமெரிக்கர்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல்பயங்கரவாத அச்சுறுத்தல்

பயங்கரவாத அச்சுறுத்தல்பயங்கரவாத அச்சுறுத்தல்

இதுதொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛பயங்கரவாதம் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தால் அமெரிக்கர்கள் கிழக்கு லடாக் மற்றும் தலைநகர் லே தவிர ஜம்மு-காஷ்மீரின் பிற இடங்களுக்கு செல்ல வேண்டாம். மேலும் ஆயுதப்படை மோதல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 10 கிலோமீட்டர் அருகே செல்ல வேண்டாம்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்தியாவின் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்கள் போன்ற மோசமான வன்முறைகள் சுற்றுலா தலங்கள் மற்றும் பிற இடங்களில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகள் முன்அறிவிப்பு இன்றி சுற்றுலா இடங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தலாம். இதனால் அதிக கவனம் வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நிலை என்ன?

பாகிஸ்தான் நிலை என்ன?

முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை பாகிஸ்தான் நாடு பற்றி தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தது. அதில் பாகிஸ்தானை நிலை 3ல் வைத்த அமெரிக்கா, பாகிஸ்தானில் பயங்கரவாதம்-மதவெறி வன்முறை காரணமாக பதற்றமான மகாணங்களுக்கு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
America has warned its own countrymen to be more careful pointing out terrorism and crime in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X