வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா.. விரல்கள் மேலே சக்கரம் சுழல்வது போல தெரிகிறதே இதுதான் "கடவுளின் கை" நாசா வெளியிட்ட புகைப்படம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கடவுளின் கை.. இந்த வார்த்தை மறுபடியும் புகழ் பெற்றுள்ளது.

1986ம் ஆண்டு கால்பந்தாட்ட உலக கோப்பை தொடரில், மரடோனா அடித்த ஒரு கோல் இந்த வார்த்தையை பொது வெளியில் பிரபலப்படுத்தியது. அதன்பிறகு, இப்போது, நாசா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் கடவுளின் கை என்ற வார்த்தையை பொது வெளியில் பேச வைத்துள்ளது.

நாசா விஷயத்தை பார்க்கும் முன்பாக மரடோனா விஷயத்தை குட்டியாக பார்த்து விட்டு வந்து விடலாம்.

செவிலியர்கள் போராட்டம் வேதனை...நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுக - கமல்,டிடிவி தினகரன் ஆதரவு செவிலியர்கள் போராட்டம் வேதனை...நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுக - கமல்,டிடிவி தினகரன் ஆதரவு

உலக கோப்பை

உலக கோப்பை

1986 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு மரடோனா தலைமைவகித்தார். அந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தியது அர்ஜென்டினா. கோப்பையை வென்றதோடு, தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை மரடோனா பெற்றார்.

மரடோனா அபாரம்

மரடோனா அபாரம்

அதேநேரம், அந்த தொடரின் காலிறுதிப் போட்டியில் ஒற்றையாளாகப் பந்தை பாஸ் செய்து எடுத்துச் சென்று கோல் அடித்தார் மரடோனா. அந்த கோல்தான், கடந்த நூற்றாண்டின் சிறந்த கோலாகக் கருதப்படுகிறது. ஆனால், அதே போட்டியில் நடுவர் பார்க்கத் தவறிய நிலையில், மரடோனாவின் கையில் பட்டுச் சென்ற பந்து கோல் ஆகியிருந்தது. அதை கடவுளின் கை என்று வர்ணித்தனர்.

நாசா வெளியிட்ட படம்

நாசா வெளியிட்ட படம்

இப்போது நாசா விஷயத்திற்கு வருவோம். நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் அலுவல்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்தப்படத்தில்தான் தங்க கை காணப்பட்டதாக நெட்டிசன்களால் கூறப்படுகிறது. ஏனெனில் ஒரு பிரமாண்ட கை விரல்களை விரித்து காட்டுவதை போல அந்த காட்சி உள்ளது. ஆசி வழங்குவதற்காக ஞானிகளால் கை காட்டப்படுமே அதுபோல இருக்கிறது. கோபத்தில் இருக்கும் ஒருவர், வேண்டாம் என்று கையால் காட்டுவதை போல அந்த கை தெரிகிறது என்கிறார்கள் சிலர். இதற்கு முன்பு திரைப்படங்களில் பார்த்த, சிவபெருமானின் கை போல தெரிகிறது என்கிறார்கள் சிலர். விரல்களுக்கு மேலே சக்கரம் போன்ற அமைப்பு இருப்பதை பார்த்தால், அது ஸ்ரீகிருஷ்ணரின் கரங்கள் என்கிறார்கள் விஷ்ணு பக்தர்கள். இதைத்தான், 'கடவுளின் கை' (Hand of God) வானில் தெரிந்தது என்கிறார்கள் நெட்டிசன்கள். நாசாவும் கூட, இதற்கு கடவுளின் கை என்று பெயர் என கூறியுள்ளது.

பல்சர்

பல்சர்

அதேநேரம், கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்தும் நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, விண்மீன் வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் ஒன்றால் உருவான ஆற்றல் மற்றும் துகள்களின் மூட்டம் என்கிறார்கள். அதாவது, இதை துடிப்பு விண்மீன் என்கிறார்கள். தங்க நிறத்தில் கை போன்ற உருவமாக தெரிகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்


PSR B1509-58 என்று பெயரிடப்பட்ட இந்த பல்சர் பின் மூலம் சுமார் 19 கிலோ மீட்டர் குறுக்களவு (விட்டம்) கொண்டது. அது நொடிக்கு சுமார் ஏழு முறை சுழல்கிறது என்று நாசாவின் சந்திரா ஆய்வகம் தெரிவிக்கிறது. துடிப்பு என்பதற்கு 'pulse' என்று கூறுவோம் அல்லவா. அந்த மூலச் சொல்லில் இருந்து உருவானதுதான் 'pulsar' என்கிறார்கள். எனவே கடவுளின் கை தோன்ற பின்னணி இது என்கிறார்கள்.

English summary
Nasa released Hand of God picture: Nicknamed the "Hand of God" in popular culture, the pulsar reponsible for this 150 light year-long nebula is only 19 kilometers in diameter. The pulsar rotates 7 times per second and has a magnetic field 15 trillion times stronger than Earth's! Scientist Jocelyn Bell discovered pulsars this week in 1967.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X