நெட்பிளிக்ஸை விரட்டிய Paramount நிறுவனம்.. புகழ்பெற்ற Warner Bros நிறுவனத்தை தனதாக்கியது!
வாஷிங்டன்: ஹாலிவுட் பழமையான தயாரிப்பு நிறுவனமான Warner Bros. Discovery நிறுவனத்தை சுமார் ரூ.10 லட்சம் கோடிக்கு (110 பில்லியன் டாலர்) வாங்க Paramount நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ், வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தை வாங்க முயன்ற நிலையில் அந்த முயற்சியை தோற்கடித்த Paramount, Warner Bros-ஐ கையகப்படுத்தி உள்ளது.
புகழ்பெற்ற ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், ஹாலிவுட்டின் மிகப் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் திரைப்பட, தொலைக்காட்சிப் பிரிவுகளையும் அதன் ஸ்ட்ரீமிங் பிரிவையும் வாங்குவதற்கான ஒரு மிகப்பெரிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 7,200 கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய். இந்த ஒப்பந்தத்தின் மூலம், புகழ்பெற்ற ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவையான 'எச்பிஓ மேக்ஸ்' ஓடிடி தளம் நெட்ஃப்ளிக்ஸ் வசம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், Warner Bros. Discovery நிறுவனத்தை சுமார் ரூ.10 லட்சம் கோடிக்கு (110 பில்லியன் டாலர்) வாங்க Paramount நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ், வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தை வாங்க முயன்ற நிலையில் அதன் முயற்சியை தோற்கடித்த Paramount, வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. இந்தாண்டு பிற்பகுதியில் Warner Bros-ஐ முழுமையாக கையகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், பாராமவுண்ட் அனைத்து நிலுவையில் உள்ள வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி பங்குகளுக்கும் ஒரு பங்கிற்கு 31 டாலரை ரொக்கமாக செலுத்தும், இது 81 பில்லியன் டாலர் பங்கு மதிப்பைக் குறிக்கிறது. மேலும் பாராமவுண்ட் எடுக்கும் கடனையும் சேர்த்து 110 பில்லியன் டாலர் ஆகும்.
'தி சோப்ரானோஸ்' (The Sopranos), 'தி ஒயிட் லோட்டஸ்' போன்ற ஹெச்பிஓ-வின் பிரபலமான படைப்புகள் பாராமவுண்ட் நிறுவனத்துக்குச் சொந்தமாகின்றன. உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'ஹாரி பாட்டர்', டிசி காமிக்ஸ் போன்ற பிரபலமான திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் உரிமைகளும் பாராமவுண்ட் நிறுவனத்தின் கீழ் வருகின்றன.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications