வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேற லெவல்.. இறந்த வேட்பாளர் சின்னத்தை தேடி பிடித்து ஜெயிக்க வைத்த மக்கள்! திரும்பி பார்த்த அமெரிக்கா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் இப்போது நடந்துள்ள மிட்-டேர்ம் தேர்தல் முடிவில் ஒரு வினோதமான நிகழ்வு நடந்துள்ளது.

அமெரிக்காவில் இப்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார். அங்குக் கடந்த 2019 இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்றார்.

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அதிபர் தேர்தல் நடைபெறும் என்றாலும் கூட, அதிபர் தேர்தல் நடந்து இரு ஆண்டுகள் கழித்து மிட்-டேர்ம் தேர்தல் நடைபெறும்.

 அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர மேலவை, கீழவை மற்றும் அதிபரின் ஒப்புதல் தேவை. மூன்றில் எதாவது ஒன்றில் மாற்றுக்கட்சியினருக்குப் பெரும்பான்மை இருந்தாலும் கூட சட்டத்தைக் கொண்டு வர முடியாது. கடந்த 2019 தேர்தலில் இரண்டிலும் ஜனநாயக கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தது. அக்கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனே அதிபர் பதவிக்கும் வந்தார்.

 மிட் டேர்ம் தேர்தல்

மிட் டேர்ம் தேர்தல்

இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் நினைத்து அனைத்து சட்டங்களையும் எளிதாக நிறைவேற்ற முடிந்தது. இப்போது இரு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், மிட்-டேர்ம் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. ஜோ பைடன் ஆட்சி மீது அதிருப்தி இருந்ததால், இதில் எதிர்பார்த்த போலவே ஜனநாயக கட்சியினர் அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றினர். தேர்தல் முடிவுகள் முழுவதும் வந்த பிறகே மேலவையும் கீழவையும் யாருடைய கண்டிரோலில் இருக்கிறது என்பது தெரிய வரும்.

 வினோதம்

வினோதம்

இந்நிலையில், இந்த மிட் டேர்ம் தேர்தலில் வினோதமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதாவது கேன்சரால் உயிரிழந்த நபரை அந்நாட்டு மக்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வைத்துள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் இருந்து எம்பியாக இருந்தவர் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த டோனி டெலூகா. 85 வயதான இவர் லிம்போமா கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

 கேன்சரால் பலி

கேன்சரால் பலி

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், கடந்த அக். 9ஆம் தேதி இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமெரிக்காவில் இன்னுமே வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறுவதால், வாக்குச்சீட்டுகளில் டெலூகாவின் பெயர் அச்சடிக்கப்பட்டு தயாராகிவிட்டது. தேர்தலுக்குக் கொஞ்ச வாரங்களே இருந்ததால், மாற்று வேட்பாளரை அறிவித்து அவருக்கான வாக்குச்சீட்டுகளை ரெடி செய்ய முடியாமல் போனது.

 மெகா வெற்றி

மெகா வெற்றி

இதனால் அந்நாட்டின் சட்டப்படி அதே வாக்குச்சீட்டுகளுடனேயே தேர்தல் நடத்தப்பட்டது. டோனி டெலூகாவுக்கு அப்பகுதியில் எந்தளவுக்குச் செல்வாக்கு என்பதை அவர் உயிரிழந்த பின்னரும் பெற்ற வாக்குகளே காட்டுவதாக உள்ளது. வாக்குப்பதிவு கிட்டதட்ட நிறைவடைந்துள்ள நிலையில், சுமார் 86% வாக்குகளைப் பெற்று அவர் உயிரிழந்த பின்னரும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

 ஜனநாயக கட்சி

ஜனநாயக கட்சி

இருப்பினும், அவர் மறைந்துவிட்ட நிலையில், அந்த இடத்திற்கு விரைவில் சிறப்பு மறுதேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து பென்சில்வேனியா ஜனநாயகக் கட்சி கூறுகையில், "பிரதிநிதி டோனி டெலூகாவின் இழப்புக்கு நாங்கள் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரம் உயிரிழந்த பின்னரும் அவருக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு என்பது அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையே காட்டுகிறது" என்று தெரிவித்து உள்ளனர்.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

அதேநேரம் அமெரிக்காவில் உயிரிழந்த பின்னர் தேர்தலில் ஒருவர் வெல்வது இது முதல்முறை இல்லை. கடந்த 2018இல், குடியரசுக் கட்சியினர் டென்னிஸ் ஹோஃப் என்பவர் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்னரே உயிரிழந்துவிட்ட போதிலும் அவர் வெற்றி பெற்றார். அதேபோல இந்த முறை ஜனநாயக கட்சியின் டோனி டெலூகா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
US politican who died of cancer last month was re-elected: US midterm election US politican won even after his death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X