வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உண்மைதாங்க! இதயமும் இல்லை! இதய துடிப்பும் இல்லை.. ஆனாலும் சகஜமாக உயிர்வாழ்ந்த நபர்.. எப்படி தெரியுமா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இதயம் துடிப்பது நின்றுவிட்டால்.. உயிரிழந்துவிடுவார்கள் என்பதே உலக நிதி.. ஆனால், அமெரிக்க ஆய்வாளர்கள் இதயமே துடிக்கவில்லை என்றாலும் மனிதர்களை உயிருடன் வைக்கும் ஒரு கருவியை வடிவமைத்துள்ளனர்.

உலகெங்கும் மருத்துவ உலகில் தொடர் ஆய்வுகளால், பல புதிய புதிய கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. இவை விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றவே உதவுகிறது.

மருத்துவ உலகில் ஏற்படும் இந்த வளர்ச்சி காரணமாகவே மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே ஆய்வாளர்கள் சிலர் உருவாக்கியுள்ள கருவி அனைவரையுமே வியக்க வைத்துள்ளது.

 இனிப்பான அறிவிப்புக்கு இதயம் கனிந்த நன்றி! கம்பீர ஸ்டாலின் என புகழாரம் சூட்டும் ஜவாஹிருல்லா! இனிப்பான அறிவிப்புக்கு இதயம் கனிந்த நன்றி! கம்பீர ஸ்டாலின் என புகழாரம் சூட்டும் ஜவாஹிருல்லா!

 இதய பாதிப்பு

இதய பாதிப்பு

மனிதர்களில் பலருக்கும் மரணமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். என்றாவது ஒரு நாள் இதயம் துடிப்பது நின்றால் உயிர் போகத் தான் செய்யும். ஆனால், இந்த ஆய்வாளர்கள் இதயமே இல்லையென்றாலும் உயிர் வாழ புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இதய நோயால் இறந்து கொண்டிருந்த ஒரு நபர், வெறும் 12 மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்வார் என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து அவரை காக்க மருத்துவர்கள் அவரது இதயத்தை அகற்றினர். அதற்குப் பதிலாக ஒரு கருவியை அவரது உடலில் வைத்து, செயற்கையான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் கருவியை உருவாக்கினர்.

 புதிய கருவி

புதிய கருவி

இந்தச் சம்பவம் ஏதோ இப்போது நடந்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நவீன கருவியை அவர்கள் உருவாக்கிவிட்டனர். 55 வயதான கிரேக் லூயிஸ் என்பவர் அமிலாய்டோசிஸ் என்ற ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார்.. இது உடலில் அசாதாரண புரதங்களை உருவாக்க.. நமது இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் விரைவாகச் செயலிழக்கக் காரணமாக அமைகிறது. இதனால் அவர் சில மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்வார் என்று முதலில் கூறிவிட்டனர். அப்போது தான் டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டாக்டர் பில்லி கோன் மற்றும் டாக்டர் பட் ஃப்ரேசியர் ஆகியோர், லூயிஸின் ரத்த ஓட்டத்திற்கு 'continuous flow' என்ற கருவியைப் பொறுத்த ஐடியா கொடுத்துள்ளனர்.

 என்ன செய்யும்

என்ன செய்யும்

அந்த இரண்டு மருத்துவர்கள் இணைந்து தான் அந்த கருவியை உருவாக்கினர். அப்போது ஆய்வில் அவர்கள் சுமார் 50 கன்றுகளில் இந்த கருவியைச் சோதனை செய்தனர். அவர்கள் கன்றுகளின் இதயங்களை அகற்றி அதற்குப் பதிலாக இந்த சாதனத்தை உள்ளே வைத்தனர். அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில், அந்த கன்றுகளால் தங்கள் அன்றாட செயல்பாடுகளை வழக்கம் போலச் செய்ய முடிந்தது. அதாவது இதயத்திற்குப் பதிலாக அந்த 'continuous flow' கருவி கன்றுகளில் உடலில் ரத்த ஓட்டத்தை உறுதி செய்தன.

 இதயம் அகற்றம்

இதயம் அகற்றம்

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "நீங்கள் ஸ்டெதாஸ்கோப்பை (பசுவின்) மார்பு பகுதியில் வைத்தால், இதயத் துடிப்பைக் கேட்க மாட்டீர்கள். எந்தவொரு சத்தமும் கேட்காது. அதேபோல பசுவை ஸ்கேன் சோதனை செய்தால்.. அங்கு இதயம் இருக்காது.. மாறாகத் தட்டையான இரு கருவிகள் தான் இருக்கும்" என்றார். லூயிஸ் சில மணிநேரங்களே உயிர் வாழ்வார் என்று அவரது மருத்துவர்கள் கூறிவிட்டதால், அவரது மனைவி லிண்டா தனது கணவரின் உடலில் அந்த கருவியை வைக்க மருத்துவர்களுக்கு அனுமதித்தார்.

 மிரண்ட மனைவி

மிரண்ட மனைவி

உடலின் வழியாக ரத்தத்தின் தொடர்ச்சியான ஓட்டத்தை வழங்குவதன் மூலம் இந்த கருவி செயல்படுகிறது.. ரத்த ஓட்டத்தை உறுதி செய்ய பிளேடுகளைப் பயன்படுத்துகிறது. இந்த கருவியை வைக்கும் முன்பு, லூயிஸ் ஒரு டயாலிசிஸ் இயந்திரம், ஒரு சுவாச இயந்திரம் மற்றும் வெளிப்புற ரத்த பம்ப் ஆகியவற்றில் வைக்கப்பட்டார். தன் கணவனின் துடிப்பைக் கேட்ட லிண்டா முயன்ற போது சற்று குழம்பிவிட்டார். துடிப்பை கேட் முயன்றால்.. அவருக்குத் துடிப்பு இல்லை.. ஆனாலும் அவரால் வழக்கமான வேலைகளைச் செய்ய முடிந்தது. இப்படியே அவர் உயிர் வாழ்ந்தார்.

 மருத்துவர்கள் நம்பிக்கை

மருத்துவர்கள் நம்பிக்கை

துரதிர்ஷ்டவசமாக, லூயிஸின் நிலை மோசமுடைய தொடங்கியது... அவரது உடலில் ரத்த ஓட்டம் வழக்கம் போல இருந்தாலும் கூட அந்த அரிய நோய் அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தைத் தாக்கியது. இதனால் சில மாதங்களிலேயே அவர் உயிரிழந்தார். இருப்பினும், அந்த கருவி குறைபாடற்ற முறையில் வேலை செய்ததாக மருத்துவர்கள் கூறினர். இதன் மூலம் இதயமே இல்லாமல் அந்த நபரால் வாழ முடிந்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இது மனிதக் குலத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

English summary
Continuous flow will help humans to live without heart: Possible to live without heart even if it is removed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X