செம ஸ்மார்ட்டுங்க.. ரூ.1.73 கோடி மருத்துவ பில்லை ரூ.30 லட்சமாக குறைத்த ஏஐ.. ஹே எப்புட்றா? பின்னணி
வாஷிங்டன்: மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். வெறும் 4 மணிநேர சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ.1.73 கோடியை பில்லாக கொடுத்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அந்த குடும்பம் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பில்லில் இருந்த மோசடியை கண்டுபிடித்து வெறும் ரூ.30 லட்சமாக குறைத்தது. இது தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.
ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு அடுத்தடுத்து பல்வேறு துறைகளில் கால்பதித்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ஏஐ என்பது ஐடி துறை ஊழியர்களுக்கு எமனாக மாறி உள்ளது. பலரது வேலைகளை ஏஐ பறித்து வருகிறது. இது சோகமான விஷயம்.

அதேவேளையில் ஏஐ பயன்பாடு என்பது வேலைகளை விரைவாக செய்து கொடுக்கிறது. இது நல்ல விஷயம். இப்படியான சூழலில் தான் தற்போது ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. ரூ.1.73 கோடிக்கு வந்த மருத்துவ பில்லை வெறும் ரூ.30 லட்சமாக குறைத்துள்ளது ஏஐ. ஆம், நீங்கள் படித்தது உண்மை தான். என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மொத்தம் 4 மணிநேரம் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அதன்பிறகு துரதிர்ஷ்டவசமாக அவரது உயிர் பிரிந்தது. இதனால் அந்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது. கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இந்த சோகத்தில் குடும்பம் மூழ்கியிருந்தபோது தான் மருத்துவமனை நிர்வாகம் அடுத்த அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதுதான் மருத்துவமனை பில். வெறும் 4 மணிநேர சிகிச்சைக்கு மருத்துவமனை நிர்வாகம் 1,95,000 அமெரிக்க டாலரை பில் போட்டு வழங்கியது. இந்திய மதிப்பில் ரூ.1.73 கோடியாகும். இதனால் சோகத்தில் இருந்த குடும்பம் பேரதிர்ச்சி அடைந்தது.
எப்படி இவ்வளவு தொகை மருத்துவ பில்லாக வரும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள் கேட்டனர். அப்போது மருத்துவ காப்பீடு முடிந்து 2 மாதங்கள் ஆகிறது. இதனால் மருத்துவ காப்பீட்டை பயன்படுத்த முடியாது. மேலும் ஒவ்வொரு சிகிச்சைக்குமான மொத்த தொகை மருத்துவ பில்லிலேயே இடம்பெற்றுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது. ஆனாலும் அந்த குடும்பத்தினரின் மனம் அந்த பில்லை ஏற்க மறுத்தது.
இதற்கிடையே தான் இறந்தவரின் உறவினர் ஒருவர் அந்த பில்லை ஏஐ பயன்படுத்தி பரிசோதிக்க முடிவு செய்தார். அவர் Claude எனும் ஏஐ-யின் சாட்போட்டை பயன்படுத்தினார். அப்போது பில்லில் இருந்த பிழைகளை அந்த ஏஐ கண்டுபிடித்து வழங்கியது. ஒரே சிகிச்சைக்கு 2 முறை பில் கட்டணம் போடப்பட்டு இருந்தது உள்பட பல்வேறு பிழைகளை சுட்டிக்காட்டியது. இதனால் மருத்துவமனை தங்களிடம் மோசடி செய்ய முயன்றதாக அந்த குடும்பத்தினர் நினைத்தனர்.
இதனை அந்த குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் எடுத்து கூறினர். மேலும் ஏஐ சுட்டிக்காண்பித்த பிழை மற்றும் டபுள் என்ட்ரி உள்ளிட்டவற்றை எடுத்து கூறினர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் தனது தவறை ஒப்புக்கொண்டு மாற்று பில்லை ரூ.30 லட்சத்துக்கு வழங்கியது. இதன்மூலம் அந்த குடும்பம் ரூ.1.43 கோடியை மிச்சப்படுத்தியது. இதற்கு ஏஐ தான் உதவியது. தற்போது இந்த செய்தி அனைவரையும் கவர்ந்துள்ளது.
-
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
grok ஏஐ பெண்களை பிகினியில் காட்டவில்லை என்ற உடன் புதிய ரூட்டை கையில் எடுத்த 'சில்லறைகள்' -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!












Click it and Unblock the Notifications