டிரம்ப்பால் அமெரிக்காவுக்கு விழுந்த அடி.. இந்தியா உட்பட சர்வதேச மாணவர்கள் எடுத்த முடிவால் திணறுதே!
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விசா நடைமுறைகளில் கடுமையா காட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கு வெளிநாட்டினர் செல்லவே ஒரு முறைக்குப் பல முறை யோசிக்கிறார்கள். இதற்கிடையே இந்த ஒரே ஆண்டில் அமெரிக்காவுக்குச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாகச் சரிந்துள்ளதாம். இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததே இதற்குப் பிரதானக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தொடக்கம் முதலே வெளிநாட்டினருக்கு எதிரான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். டிரம்ப் அரசு வந்த பிறகு குடியேற்ற அதிகாரிகளும் விசா நடைமுறைகளில் கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவுகள் இப்போது அமெரிக்காவில் தெரிய ஆரம்பித்துவிட்டது.

கடும் சரிவு
அதாவது அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் அமெரிக்கக் கல்லூரிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகம் இருப்பார்கள். மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியர்களே அமெரிக்கா சென்று கல்வி கற்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இந்தாண்டு நிலைமை மாறியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட எல்லாக் கல்வி நிறுவனங்களும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஒட்டுமொத்தமாக, புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை அமெரிக்காவில் 17% வரை சரிந்துள்ளது.
அமெரிக்கக் கல்லூரிகள்
டிரம்ப் அரசு கொண்டுவந்த கடுமையான மாணவர் விசா விதிகள் மற்றும் கொள்கைகளே இந்தச் சரிவுக்குக் காரணம் என்று அமெரிக்கக் கல்வித்துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இது தொடர்பாக ஐஐஇ எனப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எஜுகேஷன் என்ற அமைப்பு 825 அமெரிக்கக் கல்வி நிறுவனங்களிடம் ஆய்வுகளை நடத்தின. அதில் கிட்டத்தட்ட 96% நிறுவனங்கள் விசா விண்ணப்ப நடைமுறைகளில் உள்ள சிக்கலே வெளிநாட்டு மாணவர்கள் சரிவுக்குக் காரணம் என்கிறார்கள். அதேபோல 68% கல்வி நிறுவனங்கள் பயணக் கட்டுப்பாடுகளைக் காரணமாகச் சொல்கிறார்கள்.
காரணம் என்ன!
டிரம்ப் நிர்வாகம் முதலில் சட்டவிரோதக் குடியேறிகள் மீது நடவடிக்கை எடுத்தாலும் கூட அடுத்து விரைவில் சட்டப்பூர்வ குடியேறிகள் மீதும் டிரம்ப் அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. ஒரு அமெரிக்கக் கல்லூரியில் எத்தனை வெளிநாட்டு மாணவர்கள் படிக்கலாம் என்பதில் கட்டுப்பாடு கொண்டு வர டிரம்ப் அரசு முயல்கிறது.. மேலும், வெளிநாட்டு மாணவர்களின் சோஷியல் மீடியோ போஸ்ட்களை கூட ஆய்வு செய்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் வெளிநாட்டு மாணவர்களின் வருகையை நேரடியாகப் பாதித்தன.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வெளிநாட்டு மாணவர்களால் அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் மிக பெரியளவில் லாபமடையவே செய்கிறது. 2024-25 கல்வியாண்டில் சுமார் 1.2 மில்லியன் சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்றனர். அவர்கள் மூலம் அமெரிக்காவுக்குச் சுமார் 55 பில்லியன் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
ஏன் முக்கியம்
பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்துகிறார்கள். அமெரிக்க அரசு அல்லது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தரும் நிதி உதவிக்கு அவர்கள் தகுதி பெறுவதில்லை. அங்கு உள்நாட்டு மாணவர் சேர்க்கை குறைந்துவரும் நிலையில், செலவுகளைச் சமாளிக்கப் பல அமெரிக்கக் கல்வி நிறுவனங்களுக்கு இந்த நிதி தான் மிக முக்கிய ஆதாரமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது டிரம்ப் நிர்வாகம் அதையே காலி செய்யும் வகையில் செயல்படுவதாகப் பலரும் விமர்சிக்கிறார்கள்.
-
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
"என்னை விட்டுருங்க.. "விமானப்படை வீரரின் மனைவி பலாத்காரம்.. கட்டாயப்படுத்தி மதமாற்றம்! பகீர் சம்பவம் -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர்












Click it and Unblock the Notifications