நீடிக்கும் போர்... ஜோ பிடன் உக்ரைன் செல்லும் திட்டமில்லை - கைவிரித்த வெள்ளை மாளிகை
ஜோ பிடன் உக்ரைன் செல்லும் எந்த திட்டமும் இல்லை என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: ஜோ பிடன் உக்ரைன் செல்லும் எந்த திட்டமும் இல்லை என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் அமெரிக்காவின் ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு வரவேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
Recommended Video
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்துவரும் நிலையிலும், ரஷ்யா அதைப் பொருட்படுத்தாமல் உக்ரைனில் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது.
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, உக்ரைனின் மரியுபோலைக் கைப்பற்றியதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் கடற்படையினர் சரணடைந்ததாகவும் ரஷ்யா கூறியது.

போரிஸ் ஜான்சன்
ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இந்த சூழலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார். கீவ் நகரில் அதிபர் செலன்ஸ்கியை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட அவர், கீவ் நகர வீதிகளை நடந்தே பார்வையிட்டதோடு மக்களுடனும் கலந்துரையாடினார்.

உக்ரைன் பயணிக்கும் ஜோ பிடன்
இந்த நிலையில், போர் நடைபெற்றுவரும் உக்ரைனுக்கு உயரதிகாரிகளை அனுப்புவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது. அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிடு ஆஸ்டின் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் உக்ரைனுக்குச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது, வருங்காலத்தில் கீவ் நகருக்கு தானே நேரில் செல்லத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சமீபத்தில் கூறியிருந்தார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் அமெரிக்காவின் ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு அதிபர் ஜோ பிடன் உக்ரைனுக்கு வரவேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், போர் நடைபெற்றுவரும் உக்ரைனுக்கு உயரதிகாரிகளை அனுப்புவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது. அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிடு ஆஸ்டின் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் உக்ரைனுக்குச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது, வருங்காலத்தில் கீவ் நகருக்கு தானே நேரில் செல்லத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சமீபத்தில் கூறியிருந்தார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் அமெரிக்காவின் ஆதரைவை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு அதிபர் ஜோ பிடன் உக்ரைனுக்கு வரவேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதிகரிக்கும் ரஷ்யா
உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியில் தரை வழித் தாக்குதலுக்காக ரஷ்ய ராணுவம் பீரங்கிகள் உள்பட தனது பிற திறன்களை அதிகரித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷ்ய போர் பிரிவுகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 65ல் இருந்து 76 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியில் தரை வழித் தாக்குதலுக்காக ரஷ்யா ராணுவம் பீரங்கிகள் உள்பட தனது பிற திறன்களை அதிகரித்து வருவதாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷிய போர் பிரிவுகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 65ல் இருந்து 76 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஜோ பிடன் செல்வாரா?
இந்த நிலையில் ஜோ பிடன் உக்ரைன் செல்லும் எந்த திட்டமும் இல்லை என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கீவ் நகரில் ஜெலன்ஸ்கியை சந்தித்துள்ள நிலையில், பிடன் உக்ரைன் பயணம் சிக்கலான பாதுகாப்பு சவால் நிறைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு காரணங்கள்
கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மீண்டும் திறக்கும் நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்ட ஜென்சாகி, பைடனுக்கு பதிலாக அமெரிக்காவின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் உக்ரைன் செல்வார் என கூறினார்.எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் யார் எப்போது செல்வார் என்பதை தெரிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications