கடற்கரை பங்களாவில் திடீரென பறந்த விமானம்.. பதறியடித்து ஓடிய அதிபர் பிடன்.. பரபரப்பு! என்னாச்சு?
வாஷிங்டன்: உக்ரைன் போருக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் கடற்கரை பங்களாவில் ஓய்வெடுத்தபோது அதன்மீது தடையை மீறி விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விமானம் இடைமறிக்கப்பட்டு விமானியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுபற்றி வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோபைடன். இவரது மனைவி ஜில் பைடன். ஜோபைடன் அவ்வப்போது வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அதன்படி ஜோபைடன் மத்திய அட்லாண்டிக் கடற்கரையையொட்டிய டீலவார் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் தங்க முடிவு செய்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.

விமானங்கள் பறக்க தடை
சில நாட்களுக்கு முன்பு பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் சார்பில் விமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதாவது ஜோபைடன் தங்க உள்ள பங்களா உள்ள பகுதியை சுற்றிய 30 மைல் தொலைவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும், 10 மைல் தொலைவுக்கு விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

கடற்கரை பங்களாவில் ஜோபைடன் ஓய்வு
இந்நிலையில் நேற்று அதிபர் ஜோபைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் டீலவார் பகுதியில் உள்ள கடற்கரை சொகுசு பங்களாவுக்கு சென்று ஓய்வு எடுத்தார். பங்களாவை சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். பங்களாவை சுற்றி பாதுகாப்பு படையினர் பணியில் இருந்தனர்.

பங்களாவின் மேல் பறந்த விமானம்
இந்நிலையில் திடீரென்று அவர் தங்கியிருந்த சொகுசு பங்களாவின் மேல்புறம் தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் பறந்தது. ஜோபைடன் தங்கியிருப்பதால் அந்தபகுதியில் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது. மேலும் முன்னெச்சரிக்கையாக மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி விமானம் பறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இடம் மாற்றப்பட்ட ஜோபைடன்
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் அந்த பங்களாவில் இருந்து ரேஹோபோத் கடற்கரையில் உள்ள பாதுகாப்பான இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விசாரணை-வெள்ளை மாளிகை விளக்கம்
இதற்கிடையே டீலவார் சொகுசு பங்களா மீது பறந்த விமானம் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு இடைமறிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைப்பினர் விமானியிடம் விசாரணையை துவக்கினர். இந்த விசாரணையின்போது தவறுதலாக விமானம் அந்த பகுதிக்குள் நுழைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபற்றி வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், " இந்த விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிபர் மற்றும் அவரது குடும் உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை'' என கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் போருக்கு மத்தியில்...
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போர் 100 நாட்களை கடந்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது. ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் ரஷ்யா-அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் ஜோபைடன் மனைவியுடன் தங்கிய பங்களாவின் மேல்புறம் விமானம் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications