வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்காவை இணைக்க ஜோ பிடன் தீவிரம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அதிபர் டொனால்ட் டிரம்பின் அமெரிக்க அரசு விலகிய நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டதைபோல, அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவை இணைக்க ஜோ பிடன் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார்.

வரும் ஜனவரி 20ம் தேதி ஜோ பிடன் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். பதவியேற்றதும் தான் செய்யவேண்டிய அவசரமான பணிகள் குறித்து திட்டமிட்டு வருகிறார்.

Joe Biden is eager to join Paris climate agreement

கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது, தடுப்பு மருந்துகளை அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகிப்பது, அமெரிக்க பொருளாதாரத்தை சீர் செய்வது, பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் இணைப்பது உள்ளிட்ட ஒவ்வொரு திட்டங்களை செயல்படுத்தவும குழு நியமித்து வருகிறார்.

மேலும், அடுத்த 5 ஆண்டுகள் அமெரிக்காவில் உள்ள கார்பன் புகையை வெளியிடும் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்த ஜோ பிடன் திட்டமிட்டு வருகிறார்.

பருவநிலை ஒப்பந்தத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும் தனது திட்டங்களில் உறுதியாக உள்ளார். ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில், ஏற்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சியில் தலைவராக கினா மெக்கார்தி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As President Donald Trump's US government has withdrawn from the Climate Change Agreement, Joe Biden has been making serious efforts to include the United States in the agreement, as noted in the election campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X