அடேங்கப்பா! இவ்வளவு நீள ரயிலா.. "100 பெட்டிகள், 2 கி.மீ நீளம்" பிரமித்து போன பயணிகள்! எங்கு தெரியுமா
வாஷிங்டன்: சுவிட்சர்லாந்து நாட்டில் 100 பெட்டிகளுடன் சுமார் 1.9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்கி அந்நாட்டு ரயில்வே சாதித்துள்ளது. இந்த ரயில் மலைப்பகுதியில் செல்வது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்தியாவில் ஓடும் ரயில்கள் எல்லாம் சராசரியாக 650 மீட்டர் நீளம் உள்ளது.
இந்த ரயில்களையே வியப்போடும் ரயில் பயணத்தின் துவக்க காலங்களில் பலரும் வியந்து பார்ப்பது உண்டு.

2 கி.மீ நீளமுள்ள ரயில்
அதுவும் ரயில்வே பிளாட்பார்மில் பெட்டியை கண்டுபிடிக்க லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு கால்கடுக்க நடக்கும் போது, இன்னும் எவ்வளவு தூரமடா போகனும் என சலிப்படையவும் வைத்திருக்கும். ஏறத்தாழ 24 பெட்டிகளுடன் அரை கி.மீட்டர் நீளமுள்ள நமது ஊர்களுக்கே இந்த நிலைமை என்றால் சுவிட்சார்லாந்தில் 1.9 கி.மீட்டர் தொலைவுக்கு ரேடியன் ரயில்வே நிறுவனம் ரயிலை இயக்குகிறது.

100 பெட்டிகள்
சுமார் 2 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயிலில் பெட்டிகள் எண்ணிக்கை மட்டும் 100-ஆக உள்ளதாம். என்ன... என ஒரு நிமிடம் புருவத்தை உயர்த்தி படிப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. உலகிலேயே மிக நீளமான ரயில் இதுதான் என்றும், சுவிட்சார்லாந்தை சேர்ந்த அந்த ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக இயற்கை எழில் கொஞ்சும் பாதையில் இந்த ரயில் சென்றுள்ளது. அதாவது ப்ரேடாவில் இருந்து பெர்குவன் என்ற இடத்திற்கு அல்புலா/ பெர்னினா வழித்தடம் வழியாக இந்த ரயில் சென்றது.

ரயிலை இயக்க 7 ஓட்டுநர்கள்
இந்த வழித்தடம் கடந்த 2008- ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. 22 சுரங்க பாதைகளையும் 48 பாலங்களையும் கொண்டதாக இந்த வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் பயணித்து பயண இலக்கை எட்டியிருக்கிறது.
இந்த ரயிலை இயக்க 7 ஓட்டுநர்களும் 21 தொழில்நுட்ப வல்லுனர்களும் சென்றுள்ளனர்.

உலகின் நீளமான ரயிலை இயக்கி சாதனை
மணிக்கு 35 கி.மீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வளைந்து நெளிந்து சென்ற காட்சிகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சுவிட்சர்லாந்து ரயில்வேயின் 175ம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக உலகின் நீளமான ரயிலை இயக்கி சுவிட்சர்லாந்து சாதனை படைத்துள்ளது.

3 கி.மீட்டர் நீளமுள்ள சரக்கு ரயில்கள்
சுவிட்சர்லாந்தில் இயக்கப்பட்ட இந்த ரயில் 1.9 கி.மீட்டர் தொலைவுக்கு இருந்தாலும் இதை விட நீளமான அதாவது 3 கி.மீட்டர் நீளமுள்ள சரக்கு ரயில்கள் உலகின் பல இடங்களில் ஓடுகின்றன. ஆனாலும் பயணிகள் ரயிலில் அதிக நீளம் கொண்டது சுவிட்சர்லாந்தில் இயக்கப்பட்ட இந்த ரயில்தான் என்று கூறபடுகிறது. இதற்கு முன்பாக 1990- ஆம் ஆண்டில் பெல்ஜியத்தில் தான் அதிக நீளம் கொண்ட ரயில் இயக்கப்பட்டதாக இருந்த அதிகாரப்பூர்வமற்ற சாதனையை இந்த சுவிட்சர்லாந்து ரயில் முறியடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications