வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிம் உடல்நிலை.. இப்போதான் சந்தேகம் அதிகரிக்கிறது.. நைசா நழுவும் வட கொரிய ஊடகங்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அதிபர், கிம் ஜாங் உன் உடல்நிலை பற்றி, வடகொரிய ஊடகங்கள் வாய் திறக்கவே இல்லை என்பது, அவரது உடல் நிலை பற்றிய சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Recommended Video

    கிம்மின் உடல் நிலை... என்ன இப்படி சொல்லிவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

    வட கொரியாவின் அதிபர், கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஊடகம் சிஎன்என் செய்தி வெளியிட்டிருந்தது.

    கடந்த 12ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், அதன் பிறகு அவரது உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு, நடமாட முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த செய்தி கூறியது.

    கிம் ஜாங் உன் உடல் நிலை விவகாரம்- நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக தென்கொரியா தகவல் கிம் ஜாங் உன் உடல் நிலை விவகாரம்- நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக தென்கொரியா தகவல்

     வட கொரியா

    வட கொரியா

    அதே நேரம் வட கொரியாவில் இருந்து வழியாக கூடிய ஒரு செய்தி இணையதளம், கிம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான் என்றாலும், மிக மோசமாக பாதிக்கப்படவில்லை என்று கூறியது. அவர், ஒரு பகுதியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாகவும், மருத்துவர்கள் பராமரிப்பில் இருப்பதாகவும் அந்த செய்தி கூறியது.

    ட்ரம்ப் பேட்டி

    ட்ரம்ப் பேட்டி

    இதனிடையே வட கொரிய அதிபர் உடல்நிலை சீராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இவ்வாறு உலகம் முழுக்க கிம் உடல்நிலை பற்றி பேசி வருகிறது. அது தொடர்பாக சந்தேகங்களை கிளப்பி வருகிறது.

    வட கொரியா ஊடகங்கள்

    வட கொரியா ஊடகங்கள்

    வட கொரியா நாட்டில் என்ன நடக்கிறது என்பதை எளிதாக கண்டறிய முடியாது. இரும்புத்திரை நாடு. எனவே அந்த நாட்டு ஊடகங்கள் இது தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியிடுமா, என்று உலகம் முழுக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கிம் உடல்நிலை பற்றி எந்த ஒரு மறுப்பு செய்தியும் அந்த நாட்டு ஊடகங்கள் இன்று வெளியிடவே இல்லை. எதுவுமே நடக்காததுபோல ஊடகங்களில் பிற செய்திகள்தான் இடம் பிடித்துள்ளன. இவ்வாறு வடகொரிய ஊடகங்கள் கிம் உடல்நிலை பற்றி கள்ள மவுனம் காப்பது, அவரது உடல் நிலை தொடர்பாக சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

    உலகமே பேசுகிறது

    உலகமே பேசுகிறது

    கிம் ஜாங் உன் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அவரது தங்கை ஆட்சிப் பொறுப்பை ஏற்க தயாராக வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம் அதிபர் உடல்நிலை மறுபக்கம் அரசியல் மாற்றம் என பல்வேறு விஷயங்களை உலகம் அசை போட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், வட கொரிய ஊடகங்கள், ஏன் மௌனமாக இருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கான விடை எப்போது கிடைக்குமோ தெரியவில்லை.

    English summary
    President Kim Jong-un's health and the fact that the North Korean media has not open mouth have only increased his suspicions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X