வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

21 நூற்றாண்டில் இது நடக்கலாமா.. உலகில் 4 நொடிகளுக்கு ஒரு பட்டினிச்சாவு.. வெளியான பகீர் அறிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகில் 4 நொடிகளுக்கு ஒரு பட்டினிச்சாவு நிகழ்வதாகவும், ஒரு நாளைக்கு 19,700 பேர் பட்டினியால் பலியாவதாகவும் 200-க்கும் மேலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்டது. பூமியில் இருந்தபடி வேற்று கிரகத்தை ஆய்வு செய்யும் அளவுக்கு மனித சமூகம் வளர்ந்துவிட்டது.

கற்பனையில் கூட நினைத்து பார்க்காத அளவுக்கு விஞ்ஞானமும் அதை சார்ந்த பொருளாதாரமும் ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது.

''கிட்னிய விக்கலன்னா என் பொண்ண விக்கணும்..'' - பட்டினியால் ஆப்கானிஸ்தானில் தொடரும் அவல நிலை! ''கிட்னிய விக்கலன்னா என் பொண்ண விக்கணும்..'' - பட்டினியால் ஆப்கானிஸ்தானில் தொடரும் அவல நிலை!

பட்டினிச்சாவு

பட்டினிச்சாவு

ஆனால் இந்த நவீன கால காட்டத்தில் இன்னமும் பட்டினிச்சாவு நிகழ்கிறது என்பது இன்னும் சமூகத்தின் அவலமாக தொடர்வது வேதனையான விஷயமாகவே உள்ளது. அதுவும் 4 நொடிகளுக்கு ஒருவர் பட்டினியால் உயிரிழப்பதாக வெளியாகியிருக்கும் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. 75 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜீ.ஓ) இது தொடர்பான ஒரு எச்சரிக்கையையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பஞ்சம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது

பஞ்சம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது

அதில், கூறப்பட்டு இருப்பதாவது:- உலக அளவில் 345 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு எண்ணிக்கை இருமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் பஞ்சத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று உலக தலைவர்கள் உறுதி அளித்த நிலையிலும், சோமாலியாவில் இப்போதும் பஞ்சம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. உலக முழுவதும் சுமார் 45 நாடுகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் உள்ளனர்.

ஒரு நாளைக்கு 19,700 பேர் பலி

ஒரு நாளைக்கு 19,700 பேர் பலி

ஒவ்வொரு நாளும் சுமார் 19,700 பேர் பட்டினியால் உயிரிழக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு நான்கு நொடியிலும் ஒருவர் பட்டினியால் உயிரிழக்கிறார் என்று எடுத்துக்கொள்ள முடியும். விவசாயம் மற்றும் அறுவடைகள் என விவசாயத்துறையிலும் அனைத்து தொழில்நுட்ப யுக்திக உள்ள இன்றைய கால கட்டத்திலும் 21 ஆம் நூற்றாண்டில் இப்போதும் நாம் பஞ்சத்தை பற்றி பேசுவது மிகவும் துயரமானது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தாமதிக்கக் கூடாது

நாம் தாமதிக்கக் கூடாது

இந்த அறிக்கையில் கையெழுத்திட்டு என்.ஜி.ஓ அமைப்புகளில் ஒன்றான ஏமனில் உள்ள குடும்ப பராமரிப்பு சங்கத்தை சேர்ந்த மோகன்னா அகமது அலி எல்ஜப்லி என்பவர் கூறுகையில், ''இந்த விவகாரம் ஒரு நாட்டைப்பற்றியதோ, ஒரு கண்டத்தை பற்றியதோ மட்டும் கிடையாது. பட்டினிக்கு ஒரு காரணம் மட்டும் இருக்காது. இது ஒட்டு மொத்த மனித சமூகத்திற்குமான அநீதியாகும். உடனடியாக உயிர்காக்கும் உணவுகளை வழங்குவது மற்றும் நீண்ட கால உதவி அளிப்பதில் ஒரு கணம் கூட நாம் தாமதிக்கக் கூடாது'' என்றார்.

English summary
A study conducted by more than 200 non-governmental organizations has reported that one starvation occurs every 4 seconds in the world and 19,700 people die of starvation every day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X